உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
திருஞானசம்பந்த
சுவாமிகள் அருளிய திருமுறைகளின்
சிற்றாராய்ச்சிப்
பெரும் பொருட் கட்டுரை - 1
அடியார்
பெருமை
தருமை
ஆதீன வித்துவான்
முத்து.
சு. மாணிக்கவாசக முதலியார்
திருவடியை உணராமல் அடியவர் என்னும் பெயர்ப் பொருளை
உணர்வது அரிதினும் அரிதாகும். உடம்புடைய உயிர்கட்குப் பெரும்பாலும்
அவ்வுடம்பின் அடிப்பகுதியை அடி என்பது வெளிப்படை. உருவம்,
அருவம், அருவுருவம் மூன்றும் இல்லாத கடவுளுக்கு அடி உண்டு என்றால்,
உருவத்தில் கொள்ளும் அடி அல்லாத வேறு அடியே அங்குக்
கொள்ளற்பாலது.
உருவத்தில்
உள்ள அடி அருவுருத்திலும் அருவத்திலும் இருத்தல்
கூடாது. இருப்பின், அருவம் என்றும் அருவுருவம் என்றும் சால்லப்
பெறுமோ? உருவம் என்றே கொள்ளப்படும். அம் மூவகை வடிவங்களையும்
கடந்த பெருநிலையில், உணர்ந்து வழிபடப் பெறும் அடி உண்டு. அத்
திருவடியை அடையும் பொருட்டே, உருவத் திருவடியைக்
கொள்ளல்வேண்டும். திருக்கோயில்களில் திருவுருவத்தில் திருவடியை
வழிபடும்போதும் முடிவான திருவடியை நினைந்து போற்றுவதே வீடு
பேற்றிற்குத் தலைசிறந்ததொன்றாகும். அத்திருவடியைச் சேராதார் பிறவிப்
பெருங்கடலை நீந்திப் பேரின்பக் கரையை எய்தார்.
பிறவிப்
பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்
என்பது
பொய்யா மொழி. அத்திருவடிச் சேர்வும் அதனால் எய்தும்
பேரின்ப வாழ்வும் திருக்கோயில் முதலியவற்றில் உருவத் திருமேனிகளில்,
வைத்து வழிபடப் பெறும் திருவடியை மறவாது போற்று
|