வார்க்கே
கிடைக்கும். ஏனையோர் எத்தனை பிறவியெடுக்கினும்
போற்றார் ஆயின் வீடு பெறல் அரிதே.
தனக்கு
உவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கே மனக்கவலை
மாற்றல் எளிது. மற்றையோர்க்கு அரிது. அத்தாள் சேர்ந்தாரே நிலமிசை
(பேரின்ப வீட்டில்) நீடுவாழ்வார். மும்மலமும் நீங்கிய உயிரின் அறிவில்
தங்கி நின்று உணர்த்தும் முதன்மை யுடையவனை நம்மைப்போல ஒரு
வடிவுடையனென்று மட்டும் கொண்டு, அவனது உணர்வுருவை மறந்தால்
நமக்கு உய்யும் வழியே இல்லையாம். அதுவே (சத்திரூபம்) அருளுருவம்.
அதுவான் மலம்நீங்கிய உயிர்கட்கு நிறையுணர்வு (வியாபக ஞானம்)
விளைப்பது. அத்தகைய நிறையுணர்வு தான் உயிர்கள் அடையும்
பேரின்பத்துக்கு உருவம். அப்பேரின்ப நுகர்ச்சியே சிவாநந்தாநுபூதி
எனப்படும். அச் சிவாநந்தாநுபூதியைத் திருவடி என்பது சைவ மரபு.
முதல்வன் திருவடியாகிய சிவாநந்தாநுபூதியைத் தலைப்படும் என்பது
சிவஞானபோதமாபாடியம் (சூ.11.) வசனம் மலவாசனை நீங்கினால் அன்றி
முதல்வனது திருவடியாகிய சிவாநந்தத்தை அநுபவித்தல் கூடாது (மேற்படி
சூ.10.அதி 1.) திருவருளான திருவடி என்று அத்திருவருளுருவையும் கூறுதல்
உண்டு. குண குணிகட்குப் பேதம் கொள்ளாத நிலையில் அது வழங்கும்.
யான்
எனது என்று அற, உயிரில் பரை (சிவசத்தி) நின்றது அடியாம்
என்பது உண்மை நெறிவிளக்கம். என்னது யான் அற்றால் இறைவனடி
தானாகும் என்பது அநுபோக வெண்பா. அத்தகைய உண்மையில், யான்
எனது என்னும் இருவகைப் பற்றும் அற்றுத் திருவருளாய்ச் சிவாநந்தத்தை
நுகரும் அன்பரே அடியார் என்னும் திருப்பெயர்க்கு உரியவர்.
அதுபெறமுயலும் உண்மையாளர்க்கும் உபசாரத்தால் அடியார் என்னும்
அருட்பெயர் உரித்தாயிற்று.
அடியார் சிவஞானம்
ஆனது பெற்றோர்
பெற்றோர் அரனடி ஆனந்தம் கண்டோர்
அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்
அடியார் பவரே அடியார் ஆம்ஆல்
அடியார் பொன்னம்பலத்து ஆடல்கண்டாரே |
எனப்பெறும் திருமந்திரவசனத்தை
உற்றுணர்ந்தால் அடியார் என்பதன்
உண்மை வாய்மையாகும்.
|