பக்கம் எண் :

728திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

51. திருவாலவாய்

பதிக வரலாறு:

     திருக்கழுமலத்தார் வேந்தர் திருமதுரையை மேவிய நாளில், தவம்
மறைந்து அல்ல செய்வாராகிய அமணர், (அச்சிவ நெறி வளர்க்க வந்தாரது
திருமடத்தில்) மந்திரத்தால் செந்தீச் சேரச்செய்தனர். “ஆதிமந்திரம்
அஞ்செழுத்துஓதுவார் நோக்கும் எம்மாத்திரத்தினும் (எத்திசையினும்) மற்றை
மந்திர விதி வருமோ”? மந்திரம் பலியாது என்று அறிந்து அக் கீழ்மையோர்
கூடி, நம்மேன்மையை இனி அரசன் மதியான். நம் பிழைப்பும் ஒழியும் என்று
அஞ்சினர். திருஞான சம்பந்தர் வீற்றிருந்த திருமடப்புறச்சுற்றினில்,
தழல்கொண்டு புகுந்து தம் தொழில் புரிந்தனர். அதைக் கண்டோர்
ஊழிக்கற்பகக் கொழுந்துக்குச் சொல்லினர். ‘மாதவர் துயிலும் இத்திருமடப்
புறம்பு பழுது செய்வதோ பாவிகாள்’ எனப் பரிந்தருளினார். அவ் “வஞ்சனை
மனத்தோர் என்பொருட்டுச் செய்த தீங்கு ஆயினும் சிவபத்தருக்கு
எய்துமோ” என்றார். அச்சம் முன்பும் ஆத்திரம் பின்பும் உற்றன. அரசியல்
முறைமை வழுவிற்று என்று எண்ணினார். வெய்ய தீங்கு ஆகிய இது
வேந்தன் மேலதாகும் என்னும் விதி முறையால், சைவர் வாழ்மடத்தில் இட்ட
தீத்தழல், பாண்டிமாதேவியார் நெடுமங்கல நாணைக்காவல்செய்தலும்,
குலச்சிறையார் அன்பும், அரசனது சிவாபராதம் அகலுதலும், சிவநெறிக்கு
மீண்டு வரும் விதியுண்மையும், வெப்புநோய் அகல வெண்ணீறு பூசும் பேறு
அரசனுக்கிருப்பதும் ஆகிய ஏதுக்களால் “பையவே சென்று பாண்டியனுக்கு
ஆகுக” என்று பாடியருளியது இத்திருப்பதிகம்.

பண்: கௌசிகம்

ப.தொ.எண்:309   பதிக எண்: 51

திருச்சிற்றம்பலம்

3339. செய்ய னேதிரு வாலவாய் மேவிய
  ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்


     1. பொ-ரை: நடுநிலைமை உடையவரே! திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள்