பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)51. திருஆலவாய்729

  பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.         1

3340. சித்த னேதிரு வாலவாய் மேவிய
  அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எத்த ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.      2

3341. தக்கன் வேள்வி தகர்த்தரு ளாலவாய்ச்
  சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எக்க ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே.         3


செய்வீராக. பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு
மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.

     கு-ரை: செய்யனே - நடுநிலைமையை யுடையானே. ‘ஒப்பநாடி
அத்தக ஒறுத்தல்’ என்னும் குறிப்புப்போலும்.

     1. பொ-ரை: எல்லாம் வல்ல சித்தரே! திருஆலவாயில்
வீற்றிருந்தருளிய தலைவரே! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக.
ஏமாற்றித் திரிவோராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு ஆருக
மதத்தில் பக்தியுடையோனாகிய பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.

     கு-ரை: சித்தன் - எல்லாம் வல்ல சித்தராகியவன். அத்தன் -
தலைவன். எத்தர் - ஏமாற்றுவோர். கொளுவும் சுடர் - பற்றவைத்த தீ.
பத்திமான் - (ஆருக மதத்திற்) பக்தியுடையவனாகிய அரசன். தென்னன்
- பாண்டியன்; தமிழ்நாட்டின் தென்பகுதியை ஆள்பவன்.

     3. பொ-ரை: சிவனை மதியாது தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்த
திருஆலவாய்ச் சொக்கரே! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக.
இறுமாப்புடைய சமணர்கள் இம்மடத்திற்குப் பற்ற வைத்த நெருப்பு
அத்தகையோர் பக்கமே சார்ந்து பாண்டிய மன்னனைப் பற்றுவதாக.

     கு-ரை: சொக்கன் - கண்டாரைச் சொக்கச் (மயங்க) செய்யும்