3342. |
சிட்ட னேதிரு வாலவாய் மேவிய |
|
அட்டமூர்த்திய னேயஞ்ச லென்றருள்
துட்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பட்டி மன்றென்னன் பாண்டியற் காகவே. 4 |
3343. |
நண்ண லார்புர மூன்றெரி யாலவாய் |
|
அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பண்ணி யற்றமிழ்ப் பாண்டியற் காகவே. 5 |
பேரழகுடையவன்; சுந்தரபாண்டியன்
என்னும் பெயர் பூண்டமையும் காண்க.
எங்கள் பக்கம் ஏவப்பட்ட தீ, அவர்கள் பக்கமே சென்று பாண்டியற்கு
ஆகுக என்பது நான்காம் அடியின் கருத்து. எக்கர் - இறுமாப்புடையோர்,
ஆடையிலிகள் எனினுமாம் (பிங்கலம்).
4.
பொ-ரை: நீதிநெறி தவறாதவரே! திருஆலவாயில் வீற்றிருந்தருளும்
அட்டமூர்த்தி வடிவானவரே! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக!
கொடியவரான அமணர் இம்மடத்தில் பற்ற வைத்த நெருப்பு
கல்வியறிவுடையோனாகிய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.
கு-ரை:
சிட்டன் - நீதிமுறை வழுவாதவன். பட்டிமன் - கல்வியறிவு
உடைய அரசன்.
5.
பொ-ரை: பகையசுரர்களின் திரிபுரங்களை எரித்த திருஆலவாயில்
வீற்றிருந்தருளும் அண்ணலே! என்னை அஞ்சேல் என்று அருள்செய்வீராக.
சிந்திக்கும் திறனில்லாத சமணர்கள் இம்மடத்தைக் கொளுத்திய நெருப்பானது
பண்ணிசையோடு தமிழ் வழங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக.
கு-ரை:
எரி ஆலவாய் அண்ணல் - எரித்த ஆலவாயிலுள்ள
அண்ணல். எண்ணிலா - நினைத்தல் இல்லாத. பண் இயல்தமிழ்ப்
பாண்டியன் - பண்பு அமைந்த தமிழ்மொழி வழங்கும் பாண்டிநாட்டரசன்
என்பது. ஈற்றடியின் பொருள். பண்பு உணர்த்தும் விகுதி குன்றியது. இதில்
முதல் தொடருக்கு இசையோடு கூடிய என்றுரைப்பினுமாம்.
|