| |
ஏத்தி
லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற்காகவே. 8 |
| 3347. |
தாவி னானயன் றானறி யாவகை |
| |
மேவி னாய்திரு வாலவா யாயருள்
தூவி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பாவி னான்தென்னன் பாண்டியற்காகவே. 9 |
| 3348. |
எண்டி சைக்கெழி லாலவாய் மேவிய |
| |
அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே. 10 |
வீற்றிருந்தருளும்
பெருங்கருணையுடைய சிவபெருமானே! அடியேனை
அஞ்சேல் என்று அருள்செய்வீராக! இறைவனைத் துதிக்கும் பேறு பெறாத
சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பு, இப்பூவுலகை ஆளும் தென்னன்
பாண்டியனைச் சென்று பற்றுவதாக!
கு-ரை:
பிறன் மாதரை விரும்பினமைபற்றி இராவணன் தூர்த்தன்
எனப்பட்டான். ஏத்து(தல்) - துதித்தல். இல்லா(த) அமணர். பார்த் திவன்
- பூமியை ஆள்பவன்.
9.
பொ-ரை: உலகத்தைத் தாவியளந்த திருமாலும், பிரமனும் அறிய
முடியாதவாறு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற திருஆலவாய் இறைவனே!
அடியேனுக்கு அருள் புரிவீராக! நீராடமையால் தூய்மையற்ற சமணர்கள்
இம்மடத்திற்கு இட்ட இந்நெருப்பு இதற்குக் காரணமான பாண்டிய
மன்னனைச் சென்று பற்றுவதாக!
கு-ரை:
தாவினான் -உலகத்தைத் தாவி அளந்த திருமால். தூஇலா
- நீராடமையால் தூய்மை இல்லாத அமணர். பாவினான் - (அத்தீயைத்
திருமடத்தில்) பற்றுவித்தவன்.
10.
பொ-ரை: எட்டுத் திசைகளிலும் எழில் பரவும் திருஆலவாயில்
வீற்றிருந்தருளும், அண்டங்களுக்கெல்லாம் நாயகனான சிவபெருமானே!
அடியேனை அஞ்சேல் என்று அருள்புரிவீராக! சிறுமையுடைய சமணர்கள்
இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது தொன்மையாக விளங்கும் பாண்டிய
மன்னனைச் சென்று பற்றுவதாக.
|