| 
       பதிக வரலாறு:      பாண்டியனுக்கு 
        உயிரை நல்கி, மெய்ந்நெறிகாட்டி, ஊனச் சமணை நீக்கி, உலகெலாம் உய்யக்கொண்ட ஞான சம்பந்தர் வாய்மை பெருகி
 ஓங்கிற்று. திருக்கூத்தப்பிரான் திருநெறி நடந்தது. வேள்வியும் மாரியும்
 சிவநெறியும் மிகுந்து, இம்மையில், இன்பத்தில் குறைவில்லை எனினும்
 சிவநாம செபத்தால் பிறவித்துன்பம் தொலையப் பேரின்பம் பெற்றது உலகம்.
 மங்கையர்க்கரசியாரும் மன்னனும் போற்றிவரப் புகலியர் வேந்தர்
 பொங்கொளிச் சிவிகை ஏறிப் போகின்றார் திருவாலவாய்க்கு. தொண்டர்
 யாவரும் மகிழ்ச்சியுடன் புகழ்ந்து போற்றிச் செல்கின்றனர். மண்ணெலாம்
 உய்யவந்த வள்ளலாரைக் கண்டு, கண்ணாற் பயன் கொண்டனர் கன்னி
 நாட்டவர் எல்லாரும். சிவிகையினின்றும் இறங்கி, கோயில் வாயிலில்
 புகுந்தார் பாலறாவாயர். வலங்கொண்டார். கைகளும் தலைமீது ஏறக்,
 கண்ணில் ஆனந்தவெள்ளம் மெய்யெலாம் பொழிய வேத முதல்வரைப்
 பணிந்து போற்றி, ஐயனே அடியனேனை அஞ்சல் என்று அருளவல்ல
 மெய்யனே என்று விளம்பலுற்றது இத்திருப்பதிகம்.
 திருவிராகம்பண்: கௌசிகம்
 
         
          | ப.தொ.எண்:310 |  | பதிக 
            எண்: 52 |  திருச்சிற்றம்பலம் 
         
       
         
          | 3350. | வீடலால 
            வாயிலாய் விழுமியார்க ணின்கழல் |   
          |  | பாடலால 
            வாயிலாய் பரவநின்ற பண்பனே காடலால வாயிலாய் கபாலிநீள்க டிம்மதில்
 கூடலால வாயிலாய் குலாயதென்ன கொள்கையே.    1
 |  
       1. 
        பொ-ரை: வீடுபேற்றிலன்றி வேறொன்றில் விருப்பம் இல்லாதவராய் மெய்ஞ்ஞானிகள் உம் திருவடிகளைப் போற்றிப்பாட, அவர்தம்
 வாக்கினிடமாக விளங்குபவரே! அவர்கள் துதித்துப் போற்றுகின்ற பண்புகள்
 பலவற்றை உடையவரே! சுடுகாட்டைத் தவிர வேறோர் இடத்தை விரும்பி
 நில்லாதவரே! கபாலி என்னும்
 |