| 
        பெயரையுடையவராய், 
        மதில் சூழப்பெற்ற நான்மாடக்கூடல் என்னும் திருஆலவாயில் எழுந்தருளியுள்ள பெருமானாரே! நீர் மதுரையம்பதியில்
 குலாவி விளையாடுவது எம்மால் அறியும் தரத்த தன்றாயுள்ளது.
       கு-ரை: 
        விழுமியார்கள் - மெய்ஞ்ஞானிகள். வீடு அலால் - முத்திப்பேற்றையன்றி. அவாய், (வேறொன்றை) அவாவி - விரும்பி (நிற்றல்)
 இல் ஆய் - இல்லையாகி. நின் - உனது. கழல் - திருவடிகளை. (பாடல்
 வாயிலாய்) ஆல - கொண்டாட. பரவநின்ற பண்பனே - துதிக்கின்ற
 பண்பையுடையவனே. காடு அலால் - முதுகாட்டைத் தவிர. அவாய் -
 விரும்பி (நிற்றல்). இல்லாய் - இல்லாதவனே. நீள் - நெடிய. கபாலிமதில் -
 கபாலி என்னும் பெயரையுடையமதில், விழுமியார்கள் நின்கழல்பரவநின்ற
 பண்பனே. காடு அல்லால் விரும்புதலில்லாதவனே, நான்மாடக் கூடலாகிய
 திருவாலவாயில் எழுந்தருளிய பெருமானே, குலாவி விளையாடியது எம்மால்
 அறியுந்தரத்ததன்று என்றவாறு.
       வீடல் 
        ஆல ஆய் இல்லாய் - இறத்தல் அகல (பிறத்தற்கு வாயிலான) தாயில்லாதவரே. விழுமியார்கள் - மெய்யுணர்தலிற் சீரியோர்கள். நின்கழல்
 - தேவரீர் திருவடித் தாமரைகளை. பாடல் - பாடுதலையுடைய. ஆல வாய்
 இல்லாய் - கல்லால மரத்தினகமே இல்லமாகக் கொண்டவரே. பரவ நின்ற
 பண்பனே - மண்ணும் விண்ணும் மற்றும் வாழ்த்த நின்றருளிய
 பண்புடையவரே. காடு அல்லால் அவாய் இல்லாய் - மகா சங்கார காலத்தில்
 யாவும் ஒடுங்கும் காடு அல்லாமல் வேறு யாதும் விரும்பியில்லாதவரே.
 கபாலிநீள் கடிமதில் - நீண்ட கபாலிஎன்று வழங்கப்பெறும் கடிமதில்
 (சூழப்பெற்ற). கூடல் - நான்மாடக் கூடல் (என்றும் திருமருதந்துறை மதுரை
 என்றும் பெயர்கொண்ட நகரின்) கண் உள்ள, ஆலவாயிலாய் -
 திருவாலவாய் என்று வழங்கப்பெறும் திருக்கோயிலை உடையவரே. குலாயது
 என்ன கொள்கை - (கால்மாறி) ஆடுவதற்கு என்ன கருத்து?
       வீடல் 
        (வீடு + அல்) - அழிதல். ஆல - அகல. அகலல் என்றதன் மரூஉவே. ஆலல் என்பது. மயிலின் தோகை சுருங்கியிருந்து அகலும் போது
 செய்யும் ஒலியை அகவுதல் என்பர். அகலுவது தோகை, அகவுவது மயில்.
 இரண்டற்கும் சிறிது வேறுபாடு இருந்தும், இரண்டும் ஒருசேரக் கருத்துள்
 வரும் வண்ணம் மயில் ஆல என்பது மரபு. திருஞானசம்பந்த சுவாமிகளே,
 மயில் ஆலச் செருந்திகாலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடு வண்டு
 பாட, மயில் ஆல, மான்கன்று துள்ள, வரிக்கெண்டை பாயச் சுனைநீல
 |