| |
தேனார்
சோலைகள்சூழ் திருவான்மி
யூருறையும்
ஆனா யுன்னையல்லா லடையாதென
தாதரவே. 7 |
| 3391. |
பொறிவாய் நாகணையா னொடுபூமிசை |
| |
மேயவனும்
நெறியார் நீள்கழன்மேன் முடிகாண்பரி
தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மி
யூருறையும்
அறிவே யுன்னையல்லா லடையாதென
தாதரவே. 9 |
துளிக்கும் மலர்கள்
நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில்
இடபவாகனத்தில வீற்றிருந்தருளும் இறைவனே! உன்னையல்லால் என்மனம்
வேறெதையும் ஆதரவாக அடையாது.
கு-ரை:
கான் ஆர் ஆனை - காட்டிலுள்ள யானை, ஆனாய் -
இடபவாகனத்தை யுடையவனே. ஆன் - பொதுப்பெயர். இங்கக் காளையை
உணர்த்திற்று. பசுவேறும் எங்கள் பரமன் என்றதும் காண்க. (தி.2.ப.85.பா.9.)
தேன் - வண்டு.
8.
* * * * * * * * *
9.
பொ-ரை: நெருப்புப் பொறிபோல் விடம் கக்கும் வாயுடைய
பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும்
பிரமனும், நன்னெறி காட்டும் உனது நீண்ட திருவடியையும், மேலோங்கும்
திருமுடியையும் காண்பதற்கு அரியவனாய் விளங்கியவனே! நெருக்கமாக
நீண்ட பெரிய மதில்கள் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும்
முற்றுணர்வும், இயற்கை உணர்வுமுடையவனே! உன்னையல்லால் என் மனம்
வேறெதையும் ஆதரவாக அடையாது.
கு-ரை:
பொறிவாய்-புள்ளிகள் பொருந்திய, நாகணையான் -
|