பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)55. திருவான்மியூர்767

3392. குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய
       ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர்
     பேசநின்றாய்
திண்டேர் வீதியதார் திருவான்மி
     யூருறையும்
அண்டா வுன்னையல்லா லடையாதென
     தாதரவே.                          10

3393. கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு
       காழிதனில்
நன்றான புகழான் மிகுஞானசம்
     பந்தனுரை


நாக அணையான், நாகணை என்பது மரூஉ ‘கோணாகணையானும்’ எனப்
பின்னும் வருதல் அறிக. நீள்கழல் - பாதாளத்தின் கீழும் நீண்ட திருவடிகள்.
மேல்முடி - வானுலகின் மேலும் சென்றமுடி. நெறியார் கழல்.

     10. பொ-ரை: விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும், முரட்டுத்
தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய் உன்னைப்பேச
வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும் வீதிகளையுடைய
திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தேவனே! உன்னையல்லால் என்
மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது.

     கு-ரை: குண்டு ஆடும் சமணர் - விதண்டை பேசுகின்ற, கண்டார்
காரணங்கள் கருதாதவர் - சிலவற்றையறிந்தும், அவற்றின் காரணங்களை
அறியாதவர் என்றது, உலகு உள் பொருள் என்று அறிந்தும் அது ஒருவனாற்
படைக்கப்படவில்லை எனல் போல்வன. அண்டா - தேவனே.

     11. பொ-ரை: பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து
விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த ஞானசம்பந்தன்,
இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை
ஓதவல்லவர்கட்குக் கொடிய தீவினையானது நீங்கும்.