பக்கம் எண் :

768திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

  சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி
     யூரதன்மேல்
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை
     போயறுமே.                     11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: கன்று - இளஞ்செடி, திருவான்மியூர் அதன்மேல்
ஞானசம்பந்தன் உரை என இயைக்க.

திருஞானசம்பந்தர் புராணம்

ஆழ்க தீயதென் றோதிற் றயல்நெறி
வீழ்க என்றது வே றெல்லாம் அரன்பெயர்
சூழ்க என்றது தொல்லுயிர் யாவையும்
வாழி அஞ்செழுத் தோதி வளர்கவே.

 

சொன்ன வையக மும்துயர் தீர்கவே
என்னும் நீர்மை இகபரத் தில்துயர்
மன்னி வாழுல கத்தவர் மாற்றிட
முன்னர் ஞானசம் பந்தர் மொழிந்தனர்
.

திருவான்மி யூர்மன்னுந் திருத்தொண்டர் சிறப்பெதிர வருவார்மங் கலஅணிகள் மறுகுநிரைத் தெதிர்கொள்ள
அருகாக இழிந்தருளி அவர்வணங்கத் தொழுதன்பு
தருவார்தங் கோயில்மணித் தடநெடுங்கோ புரஞ்சார்ந்தார்.

                                 -சேக்கிழார்.