|
புலனடக்கம்,
அடியார்க்கு அடியாரை வழிபடுதல், அடியார்க்கு
உணவளித்தல், திருவைந்தெழுத்தை ஓதுதல், காலை மாலைகளில் கோயிலை
அடைந்து வழிபடுதல், நண்பகலிலும் மாலையிலும் கூட்டமாகச் சேர்ந்து
சிவச்சார்பாகப் பொழுதுபோக்குதல், தேவாரம் (தேவாராதநம்) புரிதல் முதலிய
பல, திருஞானசம்பந்தர் திருப்பாடல்களில் காணக்கிடைக்கின்றன.
பெரியபுராணத்துள்
விரித்துணர்த்தப்பெறும் வரலாறுகட்கு உரியவரும்
திருஞானசம்பந்தர் திருப்பதிகங்களுள்ளே கிளந்தோதப் பெற்றவரும் ஆகிய
நாயன்மார் திருப்பெயர்களாவன:-
1.
சண்டேசுர நாயனார்
2.
கண்ணப்ப நாயனார்
3.
குலச்சிறை நாயனார்
4.
கோச்செங்கட் சோழ நாயனார்
5.
சிறுத்தொண்ட நாயனார்
6.
தண்டியடிகள் நாயனார்
7.
திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்
8.
திருநீலநக்க நாயனார்
9.
நம்பிநந்தியடிகள் நாயனார்
10.
புகழ்த்துணை நாயனார்
11.
மங்கையர்க்கரசியார்
12.
முருக நாயனார்
13.
அமர்நீதி நாயனார்
14.
தில்லைவாழந்தணர் (கூட்டம்)
15.
நின்றசீர்நெடுமாற நாயனார்
16.
தண்டியடிகள் நாயனார்.
இவ்வடியவர்களை
ஆங்காங்குப் பாடியுள்ள பகுதிகளையும் அவற்றின்
கருத்துக்களையும் அறிதல் அடியார் அடிக்கு அன்பினை நம்
|