பக்கம் எண் :

ஆராய்ச்சிக் கட்டுரைகள்79

உள்ளத்தில் விளைக்கும்.

1. சண்டேசுர நாயனார்

     1.1 “பீரடைந்த பாலதாட்டப் பேணாதவன் தாதை
        வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந்தான் றனக்குத்
        தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவகுத் ததென்னே
        சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர்மே யவனே”.

                              (தி.1. ப.48 பா.7)

     1.2 “வந்தமண லால்இலிங்கம் மண்ணியின்கட் பாலாட்டும்
        சிந்தை செய்வோன்”.

                         
     (தி.1. ப.62 பா.4)

என்பனவற்றாலும் பிறவற்றாலும் சண்டேசுர நாயனாரைப் போற்றியுள்ளார்.

2. கண்ணப்ப நாயனார்

     2.1 “கானலைக் கும்மவன் கண்இடந்தப்பநீள்
        வானலைக் கும்தவத் தேவுவைத்தான்”.

                            (தி.3. ப.35 பா.7)

     2.2 “வாய்கலசம் ஆகவழி பாடுசெயும் வேடன்மல ராகும்நயனம்
        காய்கணையி னால்இடந்தீசனடி கூடுகா ளத்திமலையே”

                                   (தி.3. ப.35 பா.4)

     2.3 “கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலையெங்கள்
        அண்ணலாரூர் ஆதி ஆனைக்காவே”.

                                   (தி.3. ப.109 பா.7)

     2.4 “ஈண்டுதுயிலமரப்பினனே இருங்கண் இடந்து அடி
        அப்பினனே”

                                   (தி.3. ப.113 பா.2)

எனக் கண்ணப்ப நாயனாரைப் போற்றிக் குடுமித்தேவரைக் கும்பிட்ட பயன் கண்டருளினார்.

3. குலச்சிறை நாயனார்

     3ஆம் திருமுறை 120 ஆம் திருப்பதிகத்தில், 2.4.6.8.10.11 ஆகும்
திருப்பாடல்களில், குலச்சிறை நாயனாரைப் புகழ்ந்திருத்தல் ஓதிக் களித்தல்
சைவர் கடன்.