பக்கம் எண் :

80ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

3.1 “வெற்றவே அடியார் அடிமிசை வீழும்
     விருப்பினன் வெள்ளை நீறணியும்
கொற்றவன் றனக்கு மந்திரி ஆய
     குலச்சிறை குலாவிநின் றேத்தும்
ஒற்றைவெள் விடையன்”
3.2 “கணங்களாய் வரினும் தமியராய் வரினும்
     அடியவர் தங்களைக் கண்டால்
குணங்கொடு பணியும் குலச்சிறை குலாவும்
     கோபுரம் சூழ்மணிக் கோயில்”
3.3 “நலம்இலர் ஆக நலமதுண் டாக
     நாடவர் நாடறி கின்ற
குலம்இலர் ஆகக் குலம துண்டாகத்
     தவம்பணி குலச்சிறை பரவும்
கலைமலி கரத்தன்”
3.4 “நாவணங்கு இயல்பாம் அஞ்செழுத் தோதி
     நல்லராய் நல்இயல் பாகும்
கோவணம் பூதி சாதனம் கண்டால்
     தொழுதெழு குலச்சிறை போற்ற
ஆவணம் கொண்ட சடைமுடி யண்ணல்
     ஆலவாய் ஆவதும் இதுவே”
3.5 “தொண்டரா யுள்ளார் திசைதிசை தோறும்
     தொழுதுதன் குணத்தினைக் குலாவக்
கண்டுநாள் தோறும் இன்புறு கின்ற
     குலச்சிறை கருதி நின்றேத்த
... ... ... ... ... ... ... ... ... ... ...
அண்டநா யகன்தான் அமர்ந்துவீற் றிருந்த
     ஆலவாய் ஆவதும் இதுவே”.
3.6 “பன்னலம் புணரும் பாண்டிமாதேவி குலச்சிறை
     எனும்இவர் பணியும்
அந்நலம் பெறுசீர் ஆலவாய் ஈசன்”.

4. கோச்செங்கட்சோழ நாயனார்

        4.1 “சிலந்தி செங்கட்சோழ னாகச் செய்தான் ஊர்” (தி.2 ப.63.பா.7)