|
4.2 செம்பியன்
கோச்செங்கணான் செய் கோயிலே
(தி.3 ப.18.பா.4)
4.3 செய்யகண்
வளவன்முன் செய்த கோயிலே (தி.3 ப.18.பா.2)
என்பவற்றிலும் பிறவற்றிலும்
வளவர் கோமகனார் திருப்பெயரைக் கூறியருளினார்.
5.
சிறுத்தொண்ட நாயனார் கோச்செங்கணான்
தி.3-63ஆம்
திருப்பதிகத்தின் எல்லாத் திருப்பாடல்களிலும்
சிறுத்தொண்ட நாயனார் புகழ் பாடப்பெற்றுள்ளது. அவற்றால், அவர்
வரலாற்றுக் குறிப்புக்கள் சிலவற்றையும் அறியலாம்.
திருச்செங்காட்டங்குடி
- கணபதீச்சரம் - சிறுத்தொண்டர் -
செருவடிதோட் (பொருவன்மை) - தேனமர்தார்க் கல்நவில் தோள், சீராளன்
- சிறப்பு உலவான் - வெந்தநீறணி மார்பன். சீர் உலாம் சிட்டன்.
பணிசெய்யப் பெருமான் விளையாடும் உரிமை. சிறுத்தொண்டன் அவன்
வேண்ட, காழியடிகளையே அடிபரவும் சம்பந்தன் தமிழ் உரைப்போர்
தக்கோர் என்னும் தொகுப்பு, நுண்ணுணர்விற்கு விருந்து.
சிறப்புலவான்
சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின்று இழக்கோஎம் பெருநலமே
(தி.3 ப.63.பா.9)
என்பதில், பலபதிப்புக்களில்
கால்தான் போயிற்று, அதனால் ஆனது யாது?
சிறப்புலவன் என்பதன் பொருள் யாது? நாளடைவில் சிறப்புளவன் எனத்
திருத்தி விடுவரே!
6.
தண்டியடிகள் நாயனார்
அண்டர்தொழு
சண்டிபணிகண்டு அடிமை கொண்டஇறை
என்று (தி.3 ப.68.பா.10)
பின் வந்த பதிப்புகளில் இருக்கின்றது. அதனால்,
தண்டி என்பது தண்டியடிகள் நாயனாரைக் குறிப்பதாகக் கொண்டு
உரைப்பர் அறிஞர். தண்டி என்பது சண்டேசுர நாயனாரையும் குறிக்கும்.
|