பக்கம் எண் :

82ஆராய்ச்சிக் கட்டுரைகள் 

     “அண்ணலந் தண்டிதன் அடிகள் போற்றுவாம்”
                              - தணிகைப்புராணம், கடவுள் வாழ்த்து

7. திருநீலகண்டயாழ்ப்பாண நாயனார்

     7.1 “தாணுஎனை ஆளுடையான் தன்அடியார்க் கன்புடைமை
        பாணன்இசை பத்திமையால் பாடுதலும் பரிந்தளித்தான்

                                     (தி.1 ப.62.பா.9)

     எனத் திருக்கோளிலியிற் பாடிய திருப்பாடலில் வரும் ‘பாணன்’
என்பது, திருநீலகண்டயாழ்ப்பாண நாயனாரைக் குறித்தது என்பர் பலர்.

     7.2 “தக்க பூமனைச் சுற்றக் கருளொடே தாரம்உய்த்தது
        பாணற்கருளொடே”
           (தி.3 ப.115.பா.6)

     என்பவற்றால், தம் திருப்பாடல்களை யாழிலிசைத்து இன்புறுத்திய
நாயனாரைப் பாடி, நன்றியறிந்தருளினார்.

8. திருநீலநக்க நாயனார்

     8.1 “கடிமணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை
        அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே”

                                    (தி.3 ப.58.பா.6)
     8.2 ... ... ... ... ... ... ... ... ... ... “மன்னும்
     நிறையினார் நீலநக்கன் நெடுமாநகர் என்று தொண்டர்
     அறையும்ஊர் சாத்தமங்கை அயவந்தி”
(தி.3 ப.58.பா.11)

     என்று, திருநீலநக்க நாயனாரையும் அவர் வாழ்ந்தருளிய நெடு
மாநகராகிய சாத்தமங்கையையும் அவ்வூர்த் திருக்கோயிலாகிய
அயவந்தியையும், அதைத் தொண்டர் புகழ்வதையும் குறித்தருளியவாறு
உணர்க. “மன்னும் நிறையினார்” என்று நாயனாரைப் புகழ்ந்தது
கருதற்பாலது.

9. நம்பிநந்தியடிகள் நாயனார்

     நம்பிநந்தி என்பது நமிநந்தி என மருவிற்று, திருநாவுக்கரசு