|
10. புகழ்த்துணை
நாயனார்
அலந்த
அடியான் அற்றைக்கு அன்று ஓர்காசு எய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
(தி.2 ப.63 பா.7)
என்று, புகழ்த்துணை
நாயனார் வழிபாட்டினையும் திருவருட்பயனையும்
குறித்தருளினார். இதில், அலந்த அடியான் என்பது நன்கு நோக்கி
உணரத்தக்கது.
புகழ்த்துணை
நாயனார், சிவபெருமானைத் தவத்தால் தத்துவத்தின்
வழிபடும் நாளில், கறுப்பால் பசித்துன்பம் பெருகலுற்றது. உலகம் வருந்தியது.
தாமும் பெரிதும் வருந்தினார். என் அப்பனை என் கண் பொருந்தும்
போதத்தும் கைவிட நான் கடவேனோ? விடுவேன் அல்லேன் என்று
இராப்பகலும் மலர் புனல் கொண்டு அருச்சிப்பாராய், அப்பேராடலாற்கு
நீராடல் புரியுங்கால், சாலவுறு பசிப்பிணியால் வருந்தி, நிலைதளர்வு எய்தி,
குடம் தாங்கமாட்டாமை ஆலமணி கண்டத்தார் முடிமீது வீழ்த்து அயர்வார்
ஆனார். கொடிய நஞ்சினைத் திருக்கழுத்தில் அடக்கியதினும், பொறுமை
பெரிதும் உண்டோ? அருளால் ஒரு துயில் வந்தது. அங்கணன் கனவில்
அருளினான்; கறுப்பொழியும் அளவும் நாள்தோறும் ஒரு காசு
வைக்கப்பெறும் என்று. சிவபீடத்தில் காசு கிடைக்கப்பெற்று, சிற்றுணர்வு
ஆகிய பசியும் இன்றி, முற்றுணர்வாகிய உணவும் கொண்டு முகமலர்ந்து
அகம் உவந்தார். அங்கு அவ்வண்ணம் (அங்ஙனம்) கறுப்பொழியுங் காலம்
வரையிலும் பெற்று, பசியின்றி மெய்யடிமைத் தொழில் செய்து புனிதரடி நிழல்
சேர்ந்தார். இவ்வரலாற்றை எண்ணி, அலந்த அடியான் என்றும்,
அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி என்றும், காலையும் மாலையும் போற்றி
வழிபட்டார் என்றும் உணர்த்தி அருளினார் திருஞானசம்பந்த சுவாமிகள்.
அச்சிவபாதம் வந்து அணையும் மனத்துணையாராகிய புகழ்த்துணை
நாயனாரை அலந்த அடியான் என்றாரே அன்றிக் கிளந்து உரைத்தாரல்லர்.
அவர் வரலாற்றை நோக்கி உணர்வது மிக எளிது.
11.
மங்கையர்க்கரசியார்
மங்கையர்க்கரசி
வளவர்கோன்பாவை
வரிவளைக் கைம்மட மானி...
பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாள்தொறும் பரவ
(தி.3 ப.120 பா.1) |
|