|
என்பது முதலிய பாடல்
சிவனைக் கூடல் விளைத்தலும் ஒல்லும்.
12. முருக நாயனார்
தொண்டர்
தண்கயம் மூழ்கித்
துணையலும் சாந்தமும் புகையும்
கொண்டு கொண்டடி பரவிக்
குறிப்பறி முருகன்செய் கோலம்
கண்டு கண்டுகண் குளிரக்
களிபரந்து ஒளிமல்கு கள்ளார்
வண்டு பண்செயும் புகலூர்
வர்த்த மானீச்சரத் தாரே.
(தி.2 ப.92 பா.3)
.................... பூம்புகலூரில்
மூசு வண்டறை கொன்றை
முருகன்முப் போதுஞ்செய் முடிமேல்
வாச மாமலர் உடையார்
வர்த்த மானீச்சரத் தாரே. (தி.2 ப.92 பா.5) |
என்றவற்றால், முருக
நாயனார் திருப்புகலூர் உடையவரை ஆட்டல் சூட்டல்
முதலிய வழிபாட்டினைச் செய்து முப்போதும் முடிசாய்த்துத் தொழுதுநின்ற
ஆதிசைவர் என்றுணரலாம். குறிப்பு அறி முருகன் என்றதால், இறைவன்
திருக்குறிப்பினை அறியும் ஆற்றலும் அன்பும் மிக்கவர் என்பது புலனாகும்.
திருநாவுக்கரசர்க்குத் தில்லைச்சிற்றம் பலத்து நட்டத்தைச் சென்று
தொழுதகாலத்தில், எம்பெருமான் திருக்குறிப்பு என்று வந்தாய் என்று
உசாவுவதாயிருந்தது. அவர், திருக்கச்சியேகம்பத்தில்,
அரியயன்
இந்திரன் சந்திரா தித்தர் அமரர் எல்லாம்
உரியநின் கொற்றக் கடைத்தலை யார்உணங் காக்கிடந்தார்
புரிதரு புன்சடைப் போக முனிவர் புலம்புகின்றார்
எரிதரு செஞ்சடை யேகம்ப என்னோ திருக்குறிப்பே.
(தி.4 ப.99 பா.7) |
என்று, ஒரு மாநிழலுடையார்
திருமாண்குறிப்பினை உசாவியருளினார்.
மாணிக்கவாசகப்பிரானும், சிவனே, தென்தில்லைக் கோனே உடையானே
உன்றன் திருக்குறிப்புக் கூடுவார்நின் கழல்கூட, ஊனார் புழுக்கூடு இதுகாத்து
இங்கு இருப்பதானேன் (திருவா. 59)
|