பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)77. திருமாணிகுழி965

3626. அம்பனைய கண்ணுமை மடந்தையவ
       ளஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தவர
     னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி
     மாடமது நீடி யழகார்
உம்பரவர் கோனகர மென்னமிக
     மன்னுதவி மாணிகுழியே.               3

3627. நித்தநிய மத்தொழில னாகிநெடு
       மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய
     நின்றசிவ லோகனிடமாம்


     3. பொ-ரை: அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி
அஞ்ச, கோபமுடைய, தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை
உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், நறுமணமிக்க
சோலைகளையுடையதும், இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள்
நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று
நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும்.

     கு-ரை: அம்பு அனைய - அம்புபோன்ற. கண் உமை மடந்தை
அவள், கண்களையுடைய உமாதேவியார். அஞ்சி வெருவ - மிகவும் அஞ்ச.
சினம் உடை - கோபத்தையுடைய. கம்பம் - தூணிலே கட்டக் கூடிய.
யானை உரி செய்த - யானையை உரித்தருளிய. அரனார் - சிவபெருமான்.
கருதி - எண்ணி. மே - மேவிய; இடமாம். வம்புமலி - வாசனைமிக்க.
(சோலை) புடைசூழ - சுற்ற. மணி - இரத்தினங்கள் பதித்த. மாடம் -
வீடுகளின் வரிசை. நீடி - உயர்ந்து. அழகு ஆர் - அழகு பொருந்திய.
உம்பரவர் கோன் - தேவர்க்கு அரசனாகிய இந்திரனது. நகரம் என்ன -
நகரமாகிய அமராவதி என்னும்படி. மிக மன்னு - நன்கு நிலைபெற்ற.
(உதவிமாணி குழியே).

     4. பொ-ரை: நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம்
பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒரு
முகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளும் தலம், கொத்தாக மலர்ந்துள்ள