பக்கம் எண் :

24
 

என்றார். கயிலையிலும் இம்மண்ணுலகிலும் இதுவரை கொடுமை பல அறியாது செய்தேன் என்றும் கூறுகிறார். இராவணனுக்கு உதவியதும் சமணசமயம் சார்ந்ததும் கொண்டு இங்ஙனம் கூறுகிறார். இவைகளை எல்லாம்நான் அறியாது செய்தேன் என்பார், ‘கொடுமை பல செய்தன நானறியேன்’ என்றார். இந்நிலையில் இறைவனே என்னை ஏற்றுக் கொண்டார் என்பார். “ஏற்றாய்” என்றார். இனி, இரவும் பகலும் பிரியாது உன்னைத் தொழுவேன் என்பார். “அடிக்கே இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன்” என்றார். இப்பாடலில் அடுத்துவரும் வரிகளில் வயிற்று வலியின் துன்பத்தைக் கூறுகின்றார்.

உண்மைப் பொருள்:

தொடர்ந்துவரும் பாடல்களில் “நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன், நினையாதொரு போதும் இருந்தறியேன்” “சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்” என்றும் கூறியிருக்கிறார்.

சமண்சமயத்தில் இருந்தபோது எப்படி இதுபோல் இருந்திருக்க முடியும் என்று சிலரும், அப்பர் வஞ்சனையாக மனத்தளவில் சிவப்பற்றுடையவராயிருந்து சமண சமய விஷயங்களை அறிந்து கொள்ளவே சமணசமயம் சார்ந்து தெரிந்து பிறகு சைவம் மீண்டார் என்று சிலரும் அறியாமையால் பிதற்றுகின்றனர். முதல்பாடலைச் சரியாகப் படிக்காததே பிதற்றுதலுக்குக் காரணமாகிறது.

முதற் பாடலில், ஏற்றாய் அடிக்கே என்கிறார். ஏற்றாய் என்பது இறந்தகாலம். இறைவன் இவர்தம் பிழை நீக்கி ஏற்றபிறகே இரவும், பகலும் எப்பொழுதும் பிரியாது வணங்குவன் என்கின்றார். இம்முதற் பாடலில் இவர் இறைவன் ஏற்றவுடனேயே பிரியாது வணங்குவன் என்று சொல்கிறார். வணங்குவன் என்பது எதிர்காலம். ஏற்ற அந்நொடிக்குப் பின் நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன். சலம்பூவொடு தூபம் மறந்தறியேன், என்பதிலிருந்து இவரை இறைவன் ஏற்ற பிறகே இச்செயல்கள் நாவரசரிடம் நிகழ்ந்தன என்பது தெளிவாகிறது.

அப்பரின் மன உணர்வு:

அப்பர் பெருமான், தான் சமண சமயச் சார்பில் இருந்தமையைத் தவறு என உணர்ந்து பல முறையும் வருந்திப் பாடுகின்றார். சிதம்பரத்திற்கு வந்தபொழுது அத்தலம்