பக்கம் எண் :

242
 

கல்வெட்டு:

ஏழு கல்வெட்டுக்கள் வெளியிடப்பட்டுள்ளன. கயிலாசநாதர் கோயில் சுவரில் கி.பி.1777 - ல் ஒரு கனவான் இறந்ததாக டச்சு மொழியில் எழுதப்பட்டுள்ளது.

சீனா கோபுரத்தில் கிடைத்த ஒரு வெண்கலச்சிலையில் 12ஆம் நூற்றாண்டு எழுத்து இருந்தது. ஒரு சிறு கோயிலில் கி.பி.1777-ல் கவர்னர் ரெய்னர்வான் விலிசிங்கன் அதனைக் கட்டினதாக எழுதப்பட்டுள்ளது. ஒரு பெரிய முரசின் பேரில் ஒரு சிறு எழுத்து உண்டு. ஒரு வெள்ளி ஏட்டில் தஞ்சை அரசன் விஜயராகவன் நாகப்பட்டினத்தை டச்சுக்காரருக்குக் கொடுத்ததாக எழுதியிருக்கிறது தெலுங்கு வரிவடிவத்தில்.

மற்றொரு வெள்ளி ஏட்டில் தமிழில்அதனையே மராட்டியர் கோறி கி.பி. 1676இல் உறுதிப்படுத்தி எழுதினர். கி.பி. 1774இல் டச்சு தேவாலயம் கட்டப்பட்டது.

38. திருநெய்த்தானம்

சோழநாட்டுத்தலம். தஞ்சையை அடுத்துள்ள திருவையாற்றிற்கு மேற்கே 1.5. கி.மீ. தூரத்தில் உள்ளது. திருவையாற்று சப்தஸ்தான க்ஷேத்திரங்களில் ஏழாவது தலம். இங்கே கலைமகள் வழிபட்டுப் பேறுபெற்றாள். சுவாமிபெயர் நெய்யாடியப்பர். அம்மைபெயர் பாலாம்பிகை. ‘இளமங்கையம்மை’ எனத் தேவாரம் குறிப்பிடுகின்றது.

தீர்த்தம் - காவிரி. கிழக்குப்பார்த்த சந்நிதி. இப்போது தில்லைஸ்தானம் என வழங்குகின்றது. வடமொழியில் கிருதஸ்தானமாயிற்று. இறைவற்குப் பசுநெய் அபிஷேகிப்பது வழக்கம்.

கல்வெட்டு:

இத்தலத்தில் அரசியலார் படிஎடுத்தவண்ணம் 51 கல்வெட்டுக்கள் உள்ளன. அவற்றுள் இத்தலம் இராஜாதிராஜன் காலத்தில் இராஜராஜ வளநாட்டுப் பைங்காநாட்டுத் திருநெய்த்தானம் எனக் குறிக்கப்பெறுகின்றது. இத்தலத்து பராந்தகன் I முதலாக ஐந்து சோழ அரசர்களின் தானங்களைக் குறிக்கும் நிகழ்ச்சிகளும், நந்திவர்மன்