தல வரலாறு: இத் தலத்தே பயிரவ மகரிஷி பெருமானைப் பூசித்திருக்கிறார். முன்னொரு காலத்தில் சிவபெருமானிடத்தே பேரன்புகொண்ட வணிகர் ஒருவர் மிளகு வாணிகம் செய்து வந்தார். அவர் ஒருமுறை கடற்றுறை நோக்கி இத்தலத்தின்வழியே செல்லும்போது சுங்கச்சாவடி அண்மையில் இருக்கக்கண்டு தலத்தின் பெருமானையடைந்து பயற்றுக்கு வரியில்லையாதலால் தம்முடைய மிளகையெல்லாம் பயறாக மாற்றும்படி வேண்டினார். அவர் வேண்டுகோளின்படி மிளகு மூட்டைகள் பயறு மூட்டைகளாயின. வணிகரும் மகிழ்ந்து வரியில்லாமல் சென்றார். பின் பயறு மிளகாகியது. வணிகர் மிக்க இலாபம் பெற்றார். மேற்கண்ட செவிவழிக் கதையால் இத்தலத்தின் பெயரும் சிறப்பும் விளங்குகின்றது. பஞ்சநதவாணன் என்பவனின் கண்ணோய் நீங்குதற்காக நிலம் கொடுத்த செய்தி இத்தலத்தின் முதல் கல்வெட்டினால் அறியப்படுவதால் யாரேனும் கண்ணோய் அடைந்திருப்பின் இத்தலத்தினை அடைந்து கருணாதீர்த்தத்தில் மூழ்கி நேத்திராம்பிகை என வழங்கப்பெறும் காவியங்கண்ணியையும் திருப்பயற்றுநாதனையும் வழிபடின் கண்நோய் நீங்கப் பெறுவர் என்ற உண்மையும் புலனாகின்றது. இறைவர்: திருபயற்றுநாதர் இறைவி: காவியங்கண்ணி தல விருட்சம்: சிலந்தி மரம். தீர்த்தம்: கருணாதீர்த்தம். கல்வெட்டு: கருவறையின்மேல் புறச்சுவர் அடிப்பகுதியில் உள்ளது. “ஸ்வஸ்திஸ்ரீ திருபுவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீராஜராஜ தேவற்கு யாண்டு 25 ஆவதின் எதிராமாண்டு1கன்னி நாயிற்றுப் பூர்வபட்சத்துப் பஞ்சமியும் புதன்கிழமையும் பெற்ற உரோகிணி நாள் திருப்பயற்றூரில்
1. இதனால் சௌரமானம் தமிழகத்திலிருந்த உண்மை புலனாகும். ‘திங்கள்’ சாந்திரமானம் குறித்தது. முத்து. சு.
|