பக்கம் எண் :

245
 

திருநாமத்துக்காணியாக விற்றுக்கொண்ட பயற்றூருடையான் பஞ்சநதவாணன். ஆன கண் பெற இனமக்களால் பொன் ஆழ வீசித் தனம் பெற்று உடைய கொண்ட புத்த.....திருச்சிற்றம்பல முடையா னெழுத்து கண்ணாக விலை கொண்ட கிடங்கு நிலம் அரைமாவுக்கும் அறுநூறுகாசு விலையாக முரனிழுமாழிதித்.......பியச் சிலவும் எழுதினது இப்படி இவை புத்தமங்கலமுடையான் திருச்சிற்றம்பலமுடையான் எழுத்து என்றும் இப்படிக்கு.....வாருடையான்.....வீதிவிடங்கப்பெருமான் எழுத்தென்றும் மேற்படி இப்படி அறிவேன் பயற்றூருடையான் தில்லைநாயகன் பெரு.......எழுத்தென்றும் மேற்படி.....யான் பிச்சதேவன் எழுத்தென்றும் மேற்படி இப்படி அறிவேன் புலியூர்க்கிழவன் உன்னாகிட்டார் எழுத்து என்றும்மேற்படி பிரமாணம் எழுதினமைக்கு இவ்வூர் மத்யஸ்தன் பூசங்குடையார் திருவையாறுடையான் சங்க.......எழுத்து அறுநூறும் கிட்டதுவ”.

முதல் கல்வெட்டில் கூறப்பெற்ற செய்திகள்:

இத் திருப்பயற்றூரில் பஞ்சநதவாணன் என்பவனுக்கு நோயால் வருந்திய கண் நன்றாகும்படி, அவன் சாதியார் அறுநூறு காசுக்குத் திருச்சிற்றம்பலமுடையானுக்குச் சொந்தமாயுள்ள கிடங்கு நிலம் அரைமா வாங்கிச் சிவபெருமானுக்கு உரிய நிலமாக விட்டுள்ளனர்.

கல்வெட்டின் தொடக்கத்தில் ஸ்வஸ்தி என்று இருப்பது மங்களம் உண்டாகுக என்ற பொருளைத் தருகிறது. திரிபுவனச் சக்கரவர்த்தி என்பது சேர, சோழ, பாண்டிய நாடுகளுக்குத் தலைவன் என்ற பொருளைத் தருகிறது.

இதில் குறிக்கப்பெற்ற சோழ அரசன் இரண்டாம் இராஜராஜன் அல்லது மூன்றாம் இராஜராஜனாக இருக்கவேண்டும்.

இரண்டாம் இராஜராஜன் என்பவன் தில்லை அம்பலத்திற்குப் பொன் வேய்ந்த இரண்டாம் குலோத்துங்கனுடைய மகன் ஆவான். இந்த இராஜராஜன் கி.பி. 1146 இல் சிங்காதன மேறினான். மூவருலா என்ற நூலுள் ஒட்டக்கூத்தர் இவனை இரண்டாவது உலாவின் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் பாடியுள்ளார். மூன்றாம் இராஜராஜனாயின் இவன் காலம்12 ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியாக இருக்கவேண்டும். எனவே இக் கல்வெட்டுக்கள் சுமார் 750 ஆண்டுகட்கு முற்பட்டனவாகக் கருதப்படுகின்றன.