பக்கம் எண் :

246
 

40. திருப்பருப்பதம்

ஆந்திர மாநிலத்திலுள்ளது. வடநாட்டுத்தலம் ஐந்தனுள் ஒன்று. சென்னையிலிருந்து நந்தியால் வரை புகைவண்டியில் சென்று ஆத்மகூர் வழியாகப் பேருந்தில் செல்லலாம். சென்னையிலிருந்து ஆந்திர மாநிலப்பேருந்து நேரே ஸ்ரீசைலம் (திருப்பருப்பதம்) செல்கிறது.

இத்தலம் பன்னிரு சோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. மல்லிகார்ச்சுனம் எனப் பெயர் பெறுவது. இத்தலம் திருப்பருப்பதம் எனவும் ஸ்ரீசைலம் எனவும் வழங்கும். அருச்சுனக்ஷேத்திரங்கள் மூன்றனுள் இது ஒன்று. திருநந்திதேவர் இறைவனைத் தாங்கமலையுருவாகத் தவஞ்செய்த தலம். இத்தலத்திற்குச் செல்லும்வழி மிகக் கடினமானது. இதனைச் சுந்தரமூர்த்தி தேவாரம் ‘செல்லல் உறவரிய சீபருப்பதமலை’ என்று எடுத்துக் காட்டுகிறது. சுவாமி பருப்பதநாயகர். இறைவி பருப்பத நாயகி. தீர்த்தம் பர்வததீர்த்தம்.

கல்வெட்டு:

விஜயநகர அரசனான வீரப்பிரதாப வீரநரசிங்கராயன் இங்கு வந்து வழிபட்டிருக்கிறான். ஒரு பருவதையன் என்பானும் அவன் மனைவியும் இங்குவந்து ‘சித்தபுரம்’ என்னுமிடத்தில் ஒரு குளம் வெட்டி நந்தவனம் அமைத்தனர். கிருஷ்ணதேவராயனுடைய மந்திரியான சந்திரசேகர அமாத்யா என்பவன் கல்யாண மண்டபத்தைக் கட்டிப் பொற்கலசம் ஸ்தாபித்தான். மல்லிகார்ச்சுன கோயிலுக்கு முன்புறத்தில் ஒருமண்டபங் கட்டினான். நந்தீசுவரத்திற்கும் பிருங்கீசுவரத்திற்கும் பொன்னாலேயே திருவுரு அமைத்துக் கொடுத்தான். அந்த மண்டபத்தில் தமராசா என்பவன் கிருஷ்ணதேவராயர் சந்திரசேகர அமாத்யா இவர்களுடைய கற்சிலைகளை அமைத்தான். கோயில் செலவுகளுக்காகச் சிவபுரம் என்னும் ஊரைத் தானமாக வழங்கினான். பொற்கிண்ணமும், வெள்ளிப்பீடமும,் அளித்தான். நந்தியைப் பிரதிஷ்டை செய்து அதற்கு முன்பக்கத்தில் பொற்றூண் ஒன்றை நிறுவினான். வீரப்பிரதாப அச்சுதராயன் காலத்தில் மல்லப்ப நாயுடு என்பவன் பிரமராம்பா அம்மைக்கு ஒரு மணியும் சரிகையாடையும் அளித்தான். விஜயராயமகாராயன் மகளும், பாண்டியபெருமாள் தேவனின் மனைவியுமாகிய லெட்சம்மாள்ஜிஆயி என்பவள் தினசரி ஐந்து ஜங்கமர்களுக்கு உணவளிக்க நிலம் வழங்கினாள். சாளுவ அரசனான பதமல்லப்பன் ஒருகுளம் வெட்டியிருக்