பக்கம் எண் :

247
 

கிறான். காகதீய அரசனான பிரதாபருத்திரதேவ மகாராஜர் காலத்தில் அவனுடைய முதல் மந்திரி உச்சிக்கால வழிபாட்டிற்காக கமநாட்டில் நிலம் வழங்கியிருக்கிறார். ஜனமாதா மண்டபத்திற்கருகில் ஒரு கோயிலையும் கட்டியிருக்கிறார். அன்னப்பஜயன் என்பவன் மல்லிகார்சுனதேவர்க்கும் பிரமராம்பா தேவிக்கும் நைவேத்திய நிபந்தங்களை அளித்ததோடு முகமண்டபங்கட்டுவித்தான். தென்னண்டை மதில் பிராகாரத்தைப் பழுதுபார்த்தான். இரும்புத் தூண்களை நிறுத்தித் தெற்குக் கோபுரத்தையும் பழுதுபார்த்தான். பயிராகிஸந்தகி என்பவன் தன் மனைவியின் பெயரால் பூந்தோட்டத்திற்கு நிலம் அளித்துள்ளான். இவையன்றி நந்திநாதர், பிருங்கிநாதர் முதலியவர்களை வழிபடுகிறவர்களுக்கு வீடுகள் கட்டி அளித்த செய்தியும் செங்கையன் என்பார் சந்தனக்கல் வைத்ததும் அறியப்பெறுகின்றன. பிரதான கங்கைக்கு இரண்டாம் விதரிகரனின் மனைவியான கடம்பவித்தலம் பாபடிக்கட்டு கட்டினாள். வித்தலேசுவரருக்கு ஒரு உருவச்சிலை வழங்கினாள். இந்தத் தருமங்களைச் செய்ய இறைவன் அவளுக்குக் கனவில் வந்து அருளியதாகக் குறிப்பிடுகிறாள். மேலும் சந்திரசேகரன் வீரபத்திர தேவர் கோபுரத்தையும், தூண்களையும், பொற்கலசங்களையும் அமைத்திருக்கிறான். உதயகிரி அப்பனையங்காரு நந்தித்தூணிலிருந்து துர்க்காதேவிகோயில் வரையில் படிக்கட்டுகளைக் கட்டுவித்தான். கொண்டபட்டி என்பவன் கோயில் முழுமையும் புதுப்பித்திருக்கிறான். இவையன்றிப் பல அன்பர்கள் பொற்றூண்கள் அமைத்தும் படிக்கட்டமைத்தும் முகமண்டபங்கட்டியும் பணிசெய்தார்கள் என்று தெரிகிறது.

41. திருப்பழனம்

சோழநாட்டுக் காவிரி வடகரைத்தலம். கும்பகோணம் - திருவையாறு பேருந்துச்சாலையில் திருவையாற்றுக்கு அருகில் உள்ளது.

இது திருவையாற்று ஸப்தஸ்தானத் தலங்களுள் ஒன்று. அப்பூதி அடிகளுடைய அவதாரத் தலமாய திங்களூர் இதற்கு அண்மையில் இருப்பதால் இங்கு வழிபட வந்த அப்பர் அடிகள் இத்தலப் பதிகத்து அப்பூதிநாயனார் திருப்பெயரை அமைத்து அருளிச்செய்தார்கள். விடந்தீர்த்த பதிகமாகிய “ஒன்று கொலாம்” என்ற பதிகநிகழ்ச்சிக்கு இடமானதலம் இது. இறைவன் பெயர் ஆபத்சகாயர். அம்மையின் பெயர் பெரிய நாயகி. தீர்த்தம் - காவிரி.