பக்கம் எண் :

26
 

திருநீலக்குடிப் பதிகத்தில்,

கல்லி னோடெனைப் பூட்டி அமண்கையர்
ஒல்லை நீர்புக நூக்கஎன் வாக்கினால்
நெல்லு நீள்வயல் நீலக் குடியரன்
நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே

-தி.5 ப.72 பா.7

என்று வரலாற்றுக்குரிய அகச்சான்றாகப் பாடி உள்ளார். எனவே “சொற்றுணை வேதியன்” என்னும் பாடல் அச்செயல் நிகழ்வதற்கு முன்னே பாடியதுபோல் உள்ளது என்பதும், இப்பாடல் அந் நிகழ்ச்சியில் உய்ந்த பிறகு பாடியதாக உள்ளது என்பதும் தெளிய வேண்டிய உண்மைகளாகும்.

தில்லை வழிபாடு:

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தில்லையைத் தரிசனம் செய்தபொழுது பெற்ற அநுபவம் ஒருபடித்தாக இருப்பதனை அவரவர்கள் பாடல் வழிக்கொண்டும், சேக்கிழார் வாக்கினை வைத்தும் உணரலாம்.

திருஞானசம்பந்தர் நடராஜப் பெருமானை வழிபாடு செய்த முறையினைச் சேக்கிழார் தெளிவுறக் கூறுகிறார். பிள்ளையார், “அண்ணலார் தமக்கு அளித்த மெய்ஞ்ஞானமே ஆன அம்பலத்தையும், தம் உள் நிறைந்த ஞானத்து எழும் ஆனந்த ஒரு பெரும்தனிக் கூத்தையும் கண்ணின் முன்புறக் கண்டார் என்பது சேக்கிழார் வாக்கு. இதன் பயனாய் நடராஜப் பெருமான் தில்லைவாழ் அந்தணர்களின் திருவுருவில் அவருக்குக் காட்சி நல்கினர். இதனை,

“நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல

நெற்றிமேலுற்ற கண்ணினார் பற்று

சூலத்தார் சுடலைப் பொடி நீறணிவார் சடையார்

சீலத்தார் தொழுதேத்து சிற்றம்பலம்...”

-தி.3 ப.1 பா.3

என்ற தொடரால் ஞானசம்பந்தர்தில்லைவாழ் அந்தணர்களைக் குறிப்பிடுகிறார்.

அப்பர் அடிகள் அம்பலத்து இறைவனை வழிபாடு செய்தபோது ஒன்றி இருந்து நினைந்ததன் பயனாய்ப் பெருமான் புன்சிரிப்புடன் அபய கரத்தின்வழி, “என்று வந்தாய்”என்று