பக்கம் எண் :

265
 


சிவமயம்

திருநாவுக்கரசர் வரலாறு

(அகச்சான்றுகளுடன்)

திருநெறிச்செம்மல்,
வித்துவான் வி. சா. குருசாமி தேசிகர்.,
தமிழ்ப் பேராசிரியர், தருமை ஆதீனப் பல்கலைக்கல்லூரி.

“திருநின்ற செம்மையேசெம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன்.” -தி.7 திருத்தொண்டத் தொகை.

திருவவதாரம் :

திருமுனைப்பாடி நாட்டில் தெய்வநெறிச் சிவம் பெருக்கும் திருவாமூர் என்னும் ஊரில் வேளாண்மரபில் குறுக்கையர் குடியில் புகழனார் மாதினியார் இருவரும் இணைந்து இல்லறம் நடத்தி வந்தனர். இவ்விருவர்க்கும் திருமகளாய்த் திலகவதியாரும், சில ஆண்டுகள் கழித்து மருணீக்கியாரும் உலகில் அலகில் கலைத்துறை தழைப்பவும் அருந்தவத்தோர் நெறிவாழவும் திருவவதாரம் செய்தனர். பெற்றோர் உரிய நாளில் மருணீக்கியாரைப் பள்ளியில் அமர்த்திக் கலைபயிலச் செய்தனர். எல்லாக் கலைகளையும் திறம்பெறக் கற்றுத் தேர்ந்தார் மருணீக்கியார். திலகவதியார்க்கு வயது பன்னிரண்டு தொடங்கி நடைபெற்றது.

பெற்றோர் தம்மகளார்க்குத் திருமணம் செய்விக்க எண்ணினர். அவ்வேளையில் குலம், குணம், ஆண்மை, அரன்பால் அன்பு, உரு, திரு ஆகியன ஒருங்கு வாய்க்கப்பெற்றவராய் விளங்கிய கலிப்பகையார் திலகவதியாரைத் திருமணம் செய்துகொள்ள விரும்பிப் பெரியோர் சிலரைப் புகழனார்பால்அனுப்பினார். கலிப்பகையாரின் பண்புகளை அறிந்து பெற்றோரும் இசைவளித்தனர். பெரியோர்கள் இம்மகிழ்வுச் செய்தியைக் கலிப்பகையார்க்கு அறிவித்தனர்.

திருமணம் நிகழ்வதற்குள் வடநாட்டு மன்னர் சிலரின் படை