விளக்கிட்டார் பேறு: விளக்குதல் - கூட்டுதல் - அஃதாவது பெருக்குதல். இப்பணியைச் செய்தவர் வாழ்வில் துன்பிலாது இன்புறுவர். இதைவிடக் கோயில் தலத்தை மெழுகினால் பத்து மடங்கு அதிகம் நலம் பெறுவர். நல்ல மலர்களை எடுத்து பலவித மாலைகளாகத் தொடுத்து இறைவற்குச் சார்த்துவோர் அதனினும் மேலாகச் சிவலோக வாழ்வு பெறுவர். தூயவிண் என்றதனால் சிவலோகம் ஆயிற்று. கூட்டி, மெழுகி, கோலமிட்டு, திருமேனிக்குப் பலவகை மாலைகளைச் சார்த்தி திருவிளக் கிடவேண்டும். விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய் நெறியும் அதை அடையத்தக்க ஞானமும் கிடைக்கும். இவ்வளவு அழகு படுத்தி ஒளி ஏற்றிய பிறகு நல்ல கீதம் பாடவேண்டும். கீதம் பாடுவோர்க்குப் பெருமான் அருள்வது அளக்க இயலாப்பேறு என்கிறார் அப்பர். அவ்வினிய பாடல் (தி.4ப.77 பா.3)காண்போம். விளக்கினாற் பெற்ற வின்பமெழுக்கினாற் பதிற்றி யாகும் | துளக்கினன் மலர்தொ டுத்தாற் றூயவிண் ணேற லாகும் | விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞான மாகும் | அளப்பில கீதஞ் சொன்னார்க் கடிகடா மருளு மாறே. |
படிப்பவர்கட்கு அறிவு பெருகவேண்டுமானால், அறிவில் குழப்பமில்லாமல் தெளிவுபெற வேண்டுமானால், பெருமான் சந்நிதியில் விளக்கிட்டால் அந்த இடம் விளக்க முறுதல் போல, இடுவோன் உள்ளத்திலும் விளக்கம் கிடைக்கும். இதுபற்றியே படிப்போரும் மற்றையோரும் விளக்கிடுவதைக் காணலாம். விளக்கு எண்ணையைத் திருடினால் அறிவு விளக்கம் கிடைக்காது. அறிவிலியாகத் திரிவான். அபுத்திபூர்வப் பேறு: நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக் | கறைநிறத்தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட |
|