பக்கம் எண் :

29
 

நிறைகடன் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாம்

குறைவறக்கொடுப்பர்போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

-தி.4 ப.49.பா.8

என்பது மகாபலிச் சக்கரவர்த்தியின் வரலாறு காட்டும் திருமறைக் காட்டு நிகழ்ச்சி.

எண்ணெய் குடிக்கச் சென்ற எலி அபுத்திபூர்வமாகச் செய்த புண்ணியத்தால் பேறு பெற்றதை அப்பர் இங்கு குறிக்கின்றார்.

ஐந்தெழுத்து மந்திரம்:

திருமுறை ஆசிரியர்கள், நமசிவாய என்னும் அஞ்செழுத்தை மந்திரமாகக் கொள்ள வேண்டும் என்பதை, வற்புறுத்திக் கூறியுள்ளனர். அவ்வகையில் திருநாவுக்கரசு சுவாமிகள், சாமவேதப் பிரியனாகிய சிவபெருமானின் மந்திரமாகிய நமசிவாயத்தை ஒருவர் ஓதுவதோடு, திருநீற்றையும் மருந்தாக எண்ணி அணிந்தால், வினையும் நோயும் அழலிற்பட்ட விறகாகவெந்து அழியும் என்கிறார். இதனைப் பொது நேரிசையில்,

சந்திரற் சடையில்வைத்த சங்கரன் சாமவேதி

அந்தரத்தமரர் பெம்மா னானல்வெள் ளூர்தி யான்றன்

மந்திர நமச்சி வாயவாகநீ றணியப் பெற்றால்

வெந்தறும்வினையுநோயும் வெவ்வழல் விறகிட் டன்றே.

என்று (தி.4 ப.77 பா.4) கூறுகிறார். இக்கருத்தினை, மேலும் இத்திருமுறையில் “சொற்றுணை வேதியன்” என்ற பதிகத்தின் மூன்றாம் பாடலில் விளக்கிக் கூறுகிறார்.

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்

உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்

பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே

என்பது (தி.4 ப.11 பா.3) அப்பாடல்.

பாண்டவரும் அப்பரும்:

மகாபாரதத்தில் உள்ள பஞ்சபாண்டவர்களின் வரலாறும் திருநாவுக்கரசர் வரலாறும் தொடக்கத்தில் ஒத்துள்ளமையைக்