பக்கம் எண் :

30
 

காணலாம். பாரத வரலாறு நிகழ்ந்தது துவாபர யுகம்; திருநாவுக்கரசர் வரலாறு நிகழ்ந்தது கலியுகம். இரண்டு வரலாறுகளிலும் காணும் ஒற்றுமை-வேற்றுமைகளைச் சிறிது சிந்திப்போம்.

பொறாமையே குடிகொண்ட துரியோதனாதியர்கள் பஞ்சபாண்டவர்கள் வாழ்வதைப் பொறுக்காமல் அவர்களைஅழிக்க எண்ணினர். பஞ்சபாண்டவர்களை விருந்தினராக வரவேற்று அரக்கு மாளிகையில் தங்கச் செய்தனர். அம்மாளிகையை எரியூட்டினர். அதனின்றும் பாண்டவர்கள் திருவருளால் தப்பினர்.

திருநாவுக்கரசரைச் சமணர்கள் துர்ப்போதனையால் மகேந்திர வர்மப் பல்லவன் நீற்றறையில் இட்டபோது “மாசில் வீணையும்” என்ற பதிகம் பாடி நீற்றறை ஈசன் எந்தை இணையடியாகக் குளிர்ந்து தீங்கு இன்றிப் பிழைத்ததனோடு இவ்வரலாறு ஒத்துள்ளமை காண்க.

பஞ்சபாண்டவர்களில் பீமனை ஓர் அறையில் அடைத்து வைத்து, நச்சுப் பாம்புகளை அவ்வறையில் விட்டனர். பாம்புகள் இறந்தன. பீமன் பஞ்சாட்சரஜெப பலத்தால் தீங்கின்றிப் பிழைத்தான்.

அமணர்கள் நஞ்சு கலந்த பால்சோற்றை நாவரசருக்குக் கொடுத்தனர். நஞ்சும் அமுதாம் எங்கள் நாதன் அடியாருக்கு, என்று அகமலர்ந்து அந்நஞ்சை ஏற்று உண்டு சாகாது பிழைத்தார். இந்நிகழ்ச்சி நச்சுப்பாம்பை விடுத்து பீமனைக் கடிக்கச் செய்த வரலாற்றுடன் ஒத்துள்ளமை காணலாம்.

அடுத்து, பீமனது கைகால்களைக் கயிற்றால்கட்டி கங்கையில் வீழ்த்தினர். அதிலும் பீமன் பஞ்சாட்சரமகிமையால் கரையேறிப் பிழைத்தான்.

நாவுக்கரசரையோ அமணர்கள் கைகால்களைக் கயிற்றால் கட்டிக் கடலில் இட்டால் பீமனைப் போல் கரையேறி விடுவார் என்று எண்ணினர் போலும், அப்பரைக் கல்லுடன் சேர்த்துக் கட்டிக் கடலில் பாய்ச்சினர். அஞ்செழுத்துப் பதிகமாகிய “சொற்றுணைவேதியன்” என்ற பதிகம் பாடி, கல்லே தெப்பமாகக் கடலூருக்கு அருகில் உள்ள கரையேறவிட்ட குப்பத்தில் கரையேறினார். இது பீமன் கங்கையினின்றும் கரையேறிய வரலாற்றுடன் ஒப்புமை உள்ளதாகக் காணமுடிகிறது.

துவாபர யுகத்தில் பஞ்சபாண்டவர்கள்,அதிலும் சிறப்பாக பீமன் வரலாறும், கலியுகத்தில் அப்பர் வரலாறும் ஒத்துள்ளமையை