பக்கம் எண் :

32
 

கயிலை யாத்திரை:

திருஞானசம்பந்தர் காளத்திமலையில் இருந்தவாறே கயிலை மலைநாதனை வணங்கித் திருப்பதிகம்பாடி மனநிறைவுற்றார்.

அப்பரோ கயிலைமலையானை நேரேகண்டு வழிபட எண்ணிக் கயிலாயப் பயணம் மேற்கொண்டார். கை,கால், மார்பெலாம் தேய்ந்தும் உறுதியுடன் செயலின்றிக் கிடந்தார். அப்போது பெருமான் தோன்றி மானிடரால் கயிலை காண்டல் அரிது என்றார். அதற்கு அப்பர், “ஆளும்நாயகன் கயிலையில் இருக்கை கண்டல்லால், மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்” (தி.12 பெ.புராண. நாவுக்கரசர்புராணம்) என்றார்.

அப்பரின் உறுதிகண்ட இறைவன் அருகில் பொய்கையைத் தோற்றுவித்து, அதில் மூழ்கி ஐயாற்றில் கயிலைக்காட்சி காண்க என்றார். அப்பொய்கையே“மானசசரோவரம்” என்பதாகச் சொல்கின்றனர். அங்கு மூழ்கிய அப்பர் யாதும் சுவடு படாமல் திருவையாற்றில் கோயிலின் வடமேற்றிசையில் உள்ளஅப்பன் குட்டை என்று இன்றும் வழங்கும் திருக்குளத்தில் தோன்றி தென்கயிலாயமாகிய ஐயாற்றில் கயிலை நாதனைக் கண்டு மகிழ்ந்து பாடிப்போற்றினார்.

அப்பர் கண்ட கயிலைக் காட்சியைக் காண்போம். “மாதர்ப் பிறைக்கண்ணியானை” என்ற திருப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும்,

“காதல் மடப்பிடியோடும்களிறு வருவன கண்டேன்”

-தி.4 ப.3 பா.1

“கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன்”

--பா.2

“வரிக்குயில்பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன்”

--பா.3

“சிறையிளம் பேடையோடாடிச் சேவல் வருவன கண்டேன்”

--பா.4

“பேடை மயிலொடுங்கூடிப் பிணைந்து வருவன கண்டேன்”

--பா.5

“பைங்கிளி பேடையோடாடிப் பறந்து வருவன கண்டேன்”

--பா.10