சிவபூசை நிறைவில் சிந்திக்க வேண்டிய மற்றொரு பாடலையும் அப்பர் திருப்பழனப் பதிக இறுதியில் குறிப்பிடுகின்றார். பூசை எடுத்துக் கொள்கிறவர்கள் தம் உடலில் உயிர் உள்ளளவும் இடைவிடாது பூசை புரியவேண்டும். கண்ணை மூடும் வரையில் - இறக்கும் வரை பூசனை விடாதுபுரிதல் வேண்டும். இக்கருத்தமைந்த பாடல் காண்க. மண்பொருந்தி வாழ்பவர்க்கும்மாதீர்த்த வேதியர்க்கும் | விண்பொருந்து தேவர்க்கும்வீடுபேறாய் நின்றானைப் | பண்பொருந்த விசைபாடும்பழனஞ்சே ரப்பனையென் | கண்பொருந்தும் போதத்துங் கைவிடநான்கடவேனோ | -தி.4 ப.12 பா.5 |
முக்கரணங்கள்: மனம் வாக்கு காயமே முப்பொறி. மனித ஈடேற்றத்திற்கு இறைவன் முப்பத்தாறு தத்துவங்களோடு கூடிய உடம்பை நமக்குத் தந்திருக்கிறான். இவ்வுடம்பைக் கொண்டு நல்லதை நாளும் தன்முனைப்பின்றிச் செய்தால் விரைவில் வீடுபேற்றை அடையலாம். ஆனால் மனிதன் தனக்குக் கிடைத்த உடம்பைப் பெரும் பகுதி தீமைக்கே பயன்படுத்துகிறான். சிறிதே நன்மைக்குப் பயன்படுத்துகிறான். எனவே இவன் கரையேறுதற்குப் பலகோடி பிறவிகள் எடுக்க நேரிடுகிறது. இக்கருத்தை ஞானசம்பந்தர் திருநாரையூர்த் தேவாரத்திருப்பதிகத்துள் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். பரமன் வழிபாடு பாவம்போக்கும்: மனிதன் உரையினால், அஃதாவது வாக்கினால் வேண்டாத தீமைகளைப் பேசிப் பாவம் செய்கிறான். மனத்தினால் வேண்டாத தீய எண்ணங்களை எண்ணுவதால் பாவம் செய்கிறான். கை முதலிய உறுப்புக்களாலும் வேண்டாத தீமைகளைச் செய்து பாவங்களைச் செய்கிறான். வாக்காலும், மனத்தாலும், காயத்தாலும் செய்கின்ற முக்கரணக் குற்றங்கள் அம்மூன்று கரணங்களாலும் நன்மைகளைச் செய்தே அப்பாவங்களைப் போக்க வேண்டும் என்று சொல்கிறார் ஞானசம்பந்தர். எந்த எந்தக் கரணங்கள் எந்த எந்தத் தீமைகளைச் செய்தனவோ அவ்வக்கரணங்களைக் கொண்டே நன்மைகளைச் செய்து அவ்வத் தீமைகளைப் போக்கிக்கொள்ளவேண்டும். இது ஒருவன் செய்த செயலாகிய வினையை அநுபவித்தே தீர்க்கவேண்டும்என்ற வினைக்கோட்பாட்டை வலியுறுத்திக்
|