பக்கம் எண் :

54
 


திருச்சிற்றம்பலம்

முதல் பதிப்பின் மதிப்புரை

மாண்புமிகு. எம். பக்தவத்ஸலம் பி.ஏ., பி. எல்.,
அறநிலையத்துறை அமைச்சர், சென்னை மாநிலம்.

தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ஆறாம் நூற்றாண்டைப் “பெரும் புரட்சி ஆண்டு” என்று குறிப்பிடலாம். பல்லவ வேந்தர்களின் ஆட்சிப்புகழ், அதன் உச்சநிலையை அடைந்து விளங்கிய காலம் அது.

அக்காலத்தில்தான் சீனநாட்டின் ஹியூவன்சாங் காஞ்சி நகரத்திற்கு வந்து அங்கே சில காலம் தங்கி இருந்தார்.

பல்லவர்களின் ஆணை தென்னக மெங்கும் பரவி அதற்கப்பாலும் ஊடுருவிச் சென்றது. தமிழ்நாட்டின் கிராமங்களில் கிராம ஆட்சி ஏற்பட்டு மக்களிடையே ஒழுங்கும், அமைதியும் நிலவின. பின்னால் வந்த இரண்டாவது சோழப் பேரரசர்கள், பெரும்பாலும் தங்களுடைய கிராம ஆட்சியினை இந்த அடிப்படையிலேயே நடத்தி வந்தனர் என்பதனை நன்குஅறியலாம்.

ஆனால் அந்தக்காலத்தில் தமிழ் மொழியின் நிலைமை மிகவும் இரங்கத்தக்க நிலையிலே இருந்தது. பல்லவ மன்னர்கள் சமண சமயத்தைப் பேணிவளர்த்தனர்.

மகேந்திர பல்லவன் ஆட்சியிலே அவன் வடமொழியை ஆட்சி மொழியாகவே ஆக்கினான். இக் காரணத்தைக் கொண்டு சிலர் பல்லவர்களைத் தமிழ் நாட்டிற்குப் புறம்பானவர் என்றும் கூறுவது உண்டு.

பல்லவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? என்பதைப் பற்றி வரலாற்று அறிஞர்கள் பலவாறாக எழுதியுள்ளனர்.

அது எப்படி இருப்பினும் மகேந்திரப் பல்லவன் தமிழ் நாட்டில் வடமொழியை ஆட்சி மொழியாக ஏற்படுத்திய காரணத்தினால் அவனைத் தமிழன் அல்லன் என்று கூறுவது மட்டும் அவ்வளவுபொருத்தமாக இல்லை. நம்மிடையே உள்ள அறிஞர்களில் இன்று