பக்கம் எண் :

61
 


சிவமயம்

முதல் பதிப்பின் முகவுரை

திருச்சிற்றம்பலம்

“ஒருமருந் தாகி யுள்ளாய் உம்பரோ டுலகுக் கெல்லாம்
பெருமருந் தாகி நின்றாய் பேரமு தின்சு வையாய்க்
கருமருந் தாகி யுள்ளாய் ஆளும்வல் வினைகள் தீர்க்கும்
அருமருந் தாலவாயில் அப்பனே அருள்செ யாயே.”

திருச்சிற்றம்பலம்

பன்னிரண்டு திருமுறையுள், திருக்கடைக்காப்பென்னும் மூன்றும் திருஞானசம்பந்தருடைய திருமொழியாகும்.

நாலாவது இத் திருமுறை. ஐந்தாவது திருக்குறுந்தொகை. ஆறாவது திருத்தாண்டகம். இம் மூன்றும் திருநாவுக்கரசர் திருமொழி.

ஏழாவது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளியது.

எட்டாவது மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம். கோவைத் திருவாசகமும் அதில் அடங்கும்.

ஒன்பதாவது திருவிசைப்பா. திருப்பல்லாண்டும் அதனையடுத்து உளதாகும்,

பத்தாவது திருமந்திரம். அது திருமூலதேவ நாயனார் அருளியது.

பதினொன்றாவது திருமுறை பல பிரபந்தங்களின் தொகுதி.

பன்னிரண்டாவது திருத்தொண்டர் புராணம்; சேக்கிழார் நாயனார் அருளியது. அதைப் பெரியபுராணம் என்று வழங்குவர்.

திருமுறைகளைத் ‘தோத்திரம்’என்பர். மெய்கண்ட நூல்களைச் ‘சாத்திரம்’ என்பர். அவற்றைச் சைவர் எல்லாரும்