| 355. | போவதோர் நெறியு மானார் | | | புரிசடைப் புனித னார்நான் | | | வேவதோர் வினையிற் பட்டு | | | வெம்மைதான் விடவுங் கில்லேன் | | | கூவல்தா னவர்கள் கேளார் | | | குணமிலா வைவர் செய்யும் | | | பாவமே தூர நின்றார் | | | பழனத்தெம் பரம னாரே. | 2 |
| 356. | கண்டராய் முண்ட ராகிக் | | | கையிலோர் கபால மேந்தித் | | | தொண்டர்கள் பாடி யாடித் | | | தொழுகழற் பரம னார்தாம் | |
2. பொ-ரை: பழனத்து எம்பெருமான் உயிர் செல்வதற்குரிய வழியாக ஆனவரும், முறுக்குண்ட சடையை உடைய தூயவருமாவார். அடியேன் பலகாலும் கூறுவனவற்றை என் ஐம்பொறிகளும் ஏற்ப தில்லை. ஆதலால் துன்புறுத்தும் வினையில் அகப்பட்டு அதனால் ஏற்படும் வெப்பத்தை நீக்கமுடியாதேனாய் உள்ளேன். நற்பண்பு இல்லாத ஐம்பொறிகளும் செய்யும் தீயவினைகளைப் பழனத்துப் பெருமானாரே தீர்ப்பவராய் இருக்கின்றார். கு-ரை: பரமனார் ஆனார்; புநிதனார்; நின்றார். போவது:- உயிரின் கதி. நெறி:- அக் கதிக்கு உரிய வழி. புரி (சடை) - புரித்த; முறுக்குண்ட. சடையையுடைய தூயனார் வேவது - உள்ளம் வெம்மையுறுவது. வினையிற் படுதல் - வினைத்துடக் குறுதல். வெம்மை - வெய்ய துயரம், கில்லேன் - மாட்டேன். கூவல் - கூவுதல். அவர்கள்:- ஐவர். செய்யுளாதலின் சுட்டு முன் வந்தது, இயற்பெயர் வழியவாம் சுட்டுப் பெயரை ‘முற்படக் கிளத்தல் செய்யுளில் உரித்தே’ (தொல். சொல். 39). தி.4 திருப்பதிகம் 54 பார்க்க. ஐவரை அடக்கிச் செய்வது புண்ணியம், அவர்க்கு அடங்கிச் செய்யும் யாவும் பாவமே. அவை தீர நின்றார் பரமனார். 3. பொ-ரை: வீரராய், மழித்த தலையினராய் அல்லது திரிபுண்டரமாய்த் திருநீறு அணிந்தவராய்க் கையில் ஒரு மண்டையோட்டை ஏந்தி, அடியார்கள் பாடி ஆடித் தொழும் திருவடிகளை
|