| விண்டவர் புரங்க ளெய்த | | | வேதியர் வேத நாவர் | | | பண்டையென் வினைக டீர்ப்பார் | | | பழனத்தெம் பரம னாரே. | 3 |
| 357. | நீரவன் றீயி னோடு | | | நிழலவ னெழில தாய | | | பாரவன் விண்ணின் மிக்க | | | பரமவன் பரம யோகி | | | ஆரவ னண்ட மிக்க | | | திசையினோ டொளிக ளாகிப் | | | பாரகத் தமிழ்த மானார் | | | பழனத்தெம் பரம னாரே. | 4 |
உடையவராய், பகைவருடைய மும்மதில்களையும் அம்புஎய்து அழித்த வேதியராய், வேதம் ஓதும் நாவினராய்என்னுடைய பழைய வினைகளைத் தீர்ப்பவராய்த் திருப்பழனத்துஎம்பெருமான் அமைந்து உள்ளார். கு-ரை: கண்டர் - வீரர். ‘தெவ்வர்புரம் எரிகண்டர்’ (கோயிற் புராணம் நடராசச் சருக்கம் 26) முண்டர்- மழித் தலையர், மிண்டரென்பதன் மரூஉ அன்று. ஏந்தி என்னும் வினையெச்சம் ‘கழற் பரமனார்’ என்னும் தொகைக்கண் விரியும் உடைய என்னும் வினைக்குறிப்பொடு முடியும். தொண்டர்கள் பாடியும் ஆடியும் தொழுங் கழலையுடைய பரமனார். பரமனார்தாம் வேதியர். வேதநாவர்; தீர்ப்பார்; பழனத்தெம் பரமனார் என்று கொள்க. விண்டவர் - பகைவர்; திரிபுரத்தசுரர். பிறப்பால் வேதியர் பலரும் வேதநாவர் ஆகார். வேதநாவர் பலரும் வேதியர் ஆகார். வேதியரும் வேதநாவரும் ஆதல் அரிது. பரமனார் அறவாழியந்தணர். ‘மறையுங் கொப்பளித்தவராவர்’ (தி.4 ப.24 பா.4). பண்டைவினை:- சஞ்சிதம், பிராரத்தம். தொழுகழல்:- தொழப்படுங் கழலடி. செயப்படு பொருளில் நின்ற வினைத்தொகை. ‘அறு கயிறு’ செய்பொருள் வினைத்தொகை. மறைகள் நிறைநாவர் (தி.1 ப.71 பா.5). 4. பொ-ரை: பழனத்து எம்பெருமான் நீராய்த் தீயாய் ஒளியாய் அழகிய நிலவுலகாய்த் தேவருலகிலும் மேம்பட்ட தெய்வமாய்
|