| 358. | ஊழியா ரூழி தோறு | | | முலகினுக் கொருவ ராகிப் | | | பாழியார் பாவந் தீர்க்கும் | | | பராபரர் பரம தாய | | | ஆழியா னன்னத் தானு | | | மன்றவர்க் களப் பரிய | | | பாழியார் பரவி யேத்தும் | | | பழனத்தெம் பரம னாரே. | 5 |
மேலான சிவயோகியாராய் எங்கும் நிறைந்தவராய் அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களுமாகி மண்ணுலக உயிர்களுக்குக் கிட்டிய விண்ணுலக அமுதமாக உள்ளார். கு-ரை: நீரும் நெருப்பும் ஒளியும் அழகியதான பாரும் (மண்ணுலகும்) விண்ணுலகின் மிகுந்த மேன்மையும் உடையவன்; மேலான சிவயோகி; ஆரவன் - எங்கும் நிறைந்தவன். அண்டங்களும் மிக்க திசைகளும் முச்சுடர்களும் ஆகி மண்ணுலகத்துயிர்களுக்குக் கிடைத்த விண்ணமுதமானார். ஈண்டும் ஒருமை பன்மை மயக்கமன்று. தி.6 ப.15 பா.5. பார்க்க. 5. பொ-ரை: எல்லோரும் முன்நின்று புகழ்ந்து வழிபடும் திருப்பழனத்து எம்பெருமான், ஊழிகளாய், ஊழிதோறும் உலகிற்கு ஒப்பற்ற தலைவராய்ப் பாழாதலை உற்ற மக்களுடைய பாவங்களைப் போக்கும் மேம்பட்டவர்களுக்கும் மேம்பட்டவராய்த் தம்மைப் பரம்பொருளாகக் கருதிய, சக்கரத்தை ஏந்திய திருமாலும் அன்ன வாகனனான பிரமனும் தம் தீப்பிழம்பாகக் காட்சி வழங்கிய காலத்தில் அடிமுடி அளக்க முடியாத வலிமை உடையவராக விளங்கியவராவார். கு-ரை: ஊழி முதல்வர், ‘ஊழிமுதல்வனாய் நின்றவொருவன்’(தி.8 திருவா. 162) உலகினுக்கு ஒருவர்:- ‘எல்லாவுலகமும் ஆனாய் நீயே’ பாழியார் - பாழாதலையுற்றவர். பாவம் - அப்பாழாக்கிய பாவங்களை. (தி.4 ப.32 பா.7) பராபரர் - ‘முன்னைப்பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருள் (தி.8 திருவா. 163) பரம் அது - முதற்பொருளை; பரத்துவத்தை, ஆய - ஆராய, ஆழியான் - சக்கிரத்தவன்; பாற்கடலான். ‘ஆழியான் அன்புடைமை ஆம் ஆறும் இவ்வாறோ?’(தி.8 திருவா.162) திருமால். அன்னத்தான் - அன்னப்புள்ளூர்தியான்; நான்முகன். ‘அன்றவர்க்கு அளப்பரிய பாழியார்’ (தி.8திருவாச. 352)
|