| 359. | ஆலின்கீ ழறங்க ளெல்லா | | | மன்றவர்க் கருளிச் செய்து | | | நூலின்கீ ழவர்கட் கெல்லா | | | நுண்பொரு ளாகி நின்று | | | காலின்கீழ்க் காலன் றன்னைக் | | | கடுகத்தான் பாய்ந்து பின்னும் | | | பாலின்கீழ் நெய்யு மானார் | | | பழனத்தெம் பரம னாரே. | 6 |
| 360. | ஆதித்த னங்கி சோம | | | னயனொடு மால்பு த(ன்)னும் | | | போதித்து நின்று லகிற் | | | போற்றிசைத் தாரி வர்கள் | |
பாழி:- அகலம், வலி, நகரம், பெருமை, வீடு, பாழ் என்பவற்றுள் எதுவும் பொருந்தும். 6. பொ-ரை: பழனத்து எம்பெருமான் கல்லால மரத்தின் கீழிருந்து அறங்களை எல்லாம் ஒரு காலத்தில் நால்வருக்கு அருளிச்செய்து நூல்களை ஓதி வீடுபேற்றை விரும்பும் வைநயிகர்களுக்கு நுட்பமான பொருளாய் அமைந்து, காலனைத்தம் காலின் கீழ்க்கிடக்குமாறு விரைந்து பாய்ந்து உதைத்துப்பின், பாலில் உள்ள நெய்போல எங்கும் பரவியிருப்பவராவார். கு-ரை: ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அவர்க்கு அன்று அருளிச்செய்து. அவர் - சாமுசித்தர்; சனகாதியர்; அகத்தியர்; புலத்தியர்; திருநந்திதேவர். ஆல் - கல்லால், கீழ் என்றது கல்லால் நிழலை, நூலின் கீழவர்கள் - மார்க்கர்கண்ட நூலோதி வீடு காதலிப்பவர் ஆகிய வைநயிகர். நுண்பொருள். ‘அருளால் உணர்வார்க்கு அகலாத செம்மைப் பொருள்’ (வினா வெண்பா 13). (தி.4 ப.36 பா.8) ‘காலனைக் காலாற் காய்ந்த கடவுள்’ (தி.4 ப.22 பா.10). கடுக - விரைய, ‘பாலின்கீழ் நெய்யும்’ (தி.4 ப.64 பா.5). பாலிற்படு நெய் போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்’ (தி.5 ப.90 பா.10.) 7. பொ-ரை: சூரியன், அக்கினி, சந்திரன், பிரமன், திருமால், புதன் ஆகியோர் உலகவருக்கு அறிவுறுத்தி நின்று தாமும் சிவபெருமானைப் போற்றி வாழ்பவர்கள். இவர்கள் தம் முயற்சியால்
|