| சோதித்தா ரேழுல குஞ் | | | சோதியுட் சோதி யாகிப் | | | பாதிப்பெண் ணுருவ மானார் | | | பழனத்தெம் பரம னாரே. | 7 |
| 361. | காற்றனாற் காலற் காய்ந்து | | | காருரி போர்த்த வீசர் | | | தோற்றனார் கடலு ணஞ்சைத் | | | தோடுடைக் காதர் சோதி | | | ஏற்றினா ரிளவெண் டிங்க | | | ளிரும்பொழில் சூழ்ந்த காயம் | | | பாற்றினார் வினைக ளெல்லாம் | | | பழனத்தெம் பரம னாரே. | 8 |
சிவபெருமானைக் கண்ணால் காணலாம் என்று ஏழுலகும் தேடினார்கள். பழனத்து எம் பெருமான் இவர்களுக்கு எட்டாத வண்ணம் சோதிகளுள் மேம்பட்ட சோதியாகிப் பார்வதிபாகராக உள்ளார். கு-ரை; ஆதித்தன் - சூரியன், அங்கி - அக்கினி, சோமன் - சந்திரன், அயன் - பிரமன், மால் - விட்டுணு. புதன் - பண்டிதன், புலவன், சூரியனை அடுத்துலவுமவன் புதன். இவர்கள் உலகோர்க்குப் போதித்து நின்று சிவபிரானைப் போற்றிசைத்து வாழ்பவர்கள். ஏழுலகும் தேடினார்கள், இவர்களுக்கு எட்டாதவண்ணம் சோதியுட் சோதியாகி மாதியலும் பாதியரானார் பரமனார். 8. பொ-ரை: காலினாலே கூற்றுவனை உதைத்து, யானைத்தோலைப் போர்த்தியவராய், அனைவரையும் அடக்கி ஆள்பவர் ஆகிய பழனத்து எம் பெருமான், கடலில் தோன்றியவிடத்தைத் தம் மிடற்றுள் அடக்கி என்றும் உலகிற்குத் தோற்றமளிக்கும்படி செய்தவராய், தோடு அணிந்த காதினராய், வெண்ணிறமுடைய காளையினராய், பெரிய உலகத்தை எல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் வெள்ளிய சந்திரனில் இளைய ஒளியை அமைத்து ஒளிவிடச்செய்தவராய் அடியார்களுடைய வினைகளை எல்லாம் போக்கியவர் ஆவார். கு-ரை: கால்தனால் - காலால். காலனைக் காய்ந்து காலனை
|