பக்கம் எண் :

675
 
362.கண்ணனும் பிரம னோடு

காண்கில ராகி வந்தே

எண்ணியுந் துதித்து மேத்த

வெரியுரு வாகி நின்று

வண்ணநன் மலர்க டூவி

வாழ்த்துவார் வாழ்த்தி யேத்தப்

பண்ணுலாம் பாடல் கேட்டார்

பழனத்தெம் பரம னாரே.

9

என்னற்கியலாத இடத்து, செயப்படுபொருண்மைபடப் பாவலர் செய்துகொண்ட தொகை ‘காலற்காய்ந்து’ என்பது போல்வன. கார் உரி - கரிய யானைத்தோல். ஈசர் - உடையவர். பாற்கடலுள் நஞ்சைத் தோற்றுதலும்,அதனை உண்டு சாவாது நின்று, அதன் வலி தொலைவித்தலும் உடையவர். இது தோற்றினார் என்று இருந்தததோ? தோற்று - தோற்றுதல்; தோற்றல், தோடு உடைக் காதர்:- ‘தோடுடைய செவியன்’. ‘குழையும் சுருள்தோடும்’. ‘விண்ணென வரூஉம் காயப்பெயர்’. (தொல்காப்பியம். 305) என்றதில், வெயிலும் நிலவும் காய்தல் பற்றி விண்ணைக்காயம் என்னும் தமிழ் வழக்குண்மையுணர்க. ஆகாசம் என்னும் வடசொல் முதற் குறையாய்க் காசம் எனவாராது. வரின்; அது காயம் என மருவலாம். இளவெண்டிங்கள் சோதி ஏற்றினார் என்றும் இரும்பொழில் சூழ்ந்த காயம் இள வெண்டிங்கள் சோதி ஏற்றினார் என்றும் மாற்றி உரைக்கலாம். பெரியவுலகமெல்லாம் சூழ்ந்த ஆகாயத்தில் இளவெண்டிங்கட் சோதியை ஏற்றினார். ‘சோதி ஏற்றினார்’:- ‘அடரொளி விடையொன்றேற வல்லவர், (தி.4 ப.75 பா.7). வினைகள் எல்லாவற்றையும் நீக்கினார். பாற்றுதல் - நீக்குதல், ஓட்டுதல்.

9. பொ-ரை: பழனத்து எம் பெருமான் திருமாலும் பிரமனும் தம் முயற்சியால் காண இயலாதவராகி வந்து தியானித்தும் துதித்தும் புகழுமாறு தீப்பிழம்பின் உருவமாகக் காட்சியளித்து, தம்மை வாழ்த்தும்அடியவர்கள் நல்ல நிறத்தை உடைய மலர்களால் அருச்சித்து வாழ்த்தித் துதிக்க அவர்களுடைய பண்ணோடு கூடிய பாடல்களைக் கேட்டு மகிழ்பவராவார்.

கு-ரை: கண்ணன் - ஈண்டுத் திருமால், பிரமன் - மலரவன். (தி.4 ப.33 பா.3 பார்க்க.) காண்கிலர் - அடிமுடி தேடி அறிகிலர். எண்ணியும் - மனத்தால் (அகத்தே) நினைந்தும். துதித்தும் - வாயால்