பக்கம் எண் :

12
 

மனத்தகத்தான்:

மனத்தகத்தான், தலைமேலான் வாக்கினுள்ளான் என்னும் தாண்டகம் மனம், மொழி, மெய் என்னும் முக்கரணங்களிலும் இறைவன் பிரிப்பின்றி இருந்து இயக்குகின்றான் என்பதை எடுத்துக் காட்டுகிறது. எல்லாப் பொருள்களிடத்தும் கலப்பினால் ஒன்றியிருந்து உதவும் இறைவனின் பெருங்கருணையை இப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. இதைப்போலவே, "வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை" (தி.6 ப.19 பா.8) என்பதும் கலப்பினால் இறைவன் ஒன்றாயிருந்து அருள்செய்யும் சிறப்பை எடுத்து ஓதுகிறது."தேவர்க்கென்றும் சேயான்" என்பது வேறாய் இருந்து அருள் செய்யும் தத்துவத்தை விளக்கி நிற்கிறது.

திருவடி என் தலைமேல் வைத்தார்:

அப்பருக்குத் தாம் சமணசமயம் சார்ந்ததனால் உண்டாயஅருவருப்பு, திருநல்லூரில் பெருமான் திருவடி சூட்டியபிறகே நீங்கியது. இதன்பிறகு அருவருப்பாய குறிப்புக் காணப்பெறவில்லை. ஊன்றி உணர்வோர் இக்கருத்தைநன்கறிவர். புறச்சமயம் சார்ந்ததனால் தமக்கு உண்டாய அருவருப்பைப் போக்கவே தில்லைத் திருவீதியில் அங்கப்பிரதட்சணம் செய்தார். திருத்தூங்கானை மாடத்தில், "மின்னாரும் மூவிலைச்சூலம் என்மேல்பொறி" (தி.4 ப.109 பா.1) என வேண்டி, சூலக்குறியும் இடபக்குறியும் பெற்றார். திருச்சத்தி முற்றத்தில் "பூவார்அடிச்சுவடு என்மேல் பொறித்துவை"(தி.4 ப.96 பா.1) என வேண்டினார். அவ்வேண்டுகோளைப் பெருமான் திருநல்லூரில்நிறைவு செய்தருளினார். "இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கிநனைந்தனைய திருவடிஎன் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார்நல்லவாறே" (தி.6 ப.14 பா.1) என்பது அப்பர் அருள்வாக்கு. இப்பாடலின் முன்பகுதியே "நினைந்துருகும் அடியாரை நையவைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்கவைத்தார்" என்பது.

பெருமானின் பெருமையையும் தமது சிறுமையையும் நினைத்தால்மனம் இயல்பாகவே உருகத்தான் செய்யும். அவ்வநுபவம் அப்பருக்கு வாய்த்தது.அதனை அவர்தம் அருள்வாக்கு நமக்கும் புலப்படுத்துகிறது. நையவைத்தார் என்பதற்குத் துன்புறவைத்தார் என்றும், அதனால் மனப்பக்குவம் அடைந்த போது தீவினைகளை நீங்குமாறு செய்தார் பெருமான், என்றும் கொள்வர். ஆனால் இத்தொடருக்கு அருணைவடிவேலனார், மனம் மேலும் இளக வைத்தார் என்று கூறி, தற்போதம் கெட வைத்தார் என்பார்.

பத்தாம் அடியார்:

திருக்கருகாவூர்த் திருத்தாண்டகப் பதிகம் "குருகாம்வயிரமாம்"