(தி.6 ப.15 பா.1) எனத் தொடங்குவது. முதல்பாடல் மூன்றாம் அடியில் "உள்நின்ற நாவிற்கு உரையாடியாம்" என்கிறார். நாவிற்குள் உடனாயிருந்து உதவும் தன்மையை இதில் புலப்படுத்துகிறார். இரண்டாம் பாடல் இரண்டாம் அடியில் "பத்தாம் அடியார்க்கோர் பாங்கனுமாம்"என்கிறார். இதற்குப் பத்து இலக்கணங்களையுடைய அடியார் என்பது பொருள்.அவற்றுள் அக இலக்கணம் பத்தையும் உபதேச காண்டம் கூறுகிறது. அவை, 1.கண்டம்விம்மல் 2. நாத்தழுதழுத்தல், 3. நகைமுகம் காட்டல், 4. உடல் நடுங்கல்,5. மயிர்சிலிர்த்தல், 6. வியர்த்தல், 7. சொல் இன்மை 8. வசம் அழிதல், 9.கண்ணீர் அரும்பல், 10. வாய்விட்டழைத்தல் என்பனவாம். புற இலக்கணம் பத்து. அவை விபூதியணிதல், உருத்திராக்கம் அணிதல், முதலியனவாம். ஏழாம் பாடல்முதலடியில், "ஆதிரை நாளானாம்" என இறைவனை அறிமுகப்படுத்துகிறார். ஒன்பதாம் பாடல் மூன்றாம் அடியில், "எட்டுருவ மூர்த்தியாம்எண்தோளானாம், என் உச்சிமேலானாம் எம்பிரானாம்" என்று அருளியுள்ளார். பஞ்சபூதங்கள், சூரியன், சந்திரன், உயிர் என்பன இறைவன் எழுந்தருளும் எட்டு உருவங்களாம். என் உச்சிமேலான் என்பது, தலைக்குமேல் 12அங்குல அளவை துவாதசாந்தம் என்பர். அங்குதான் இறைவன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இதைப்பல இடங்களிலும் குறிக்கின்றார்."மனத்தகத்தான்" (தி.6 ப.8 பா.5) எனத்தொடங்கும் திருக்காளத்தித்திருத்தாண்டகத்தில் "தலைமேலான்" என்று குறித்திருப்பதும் இக்கருத்துப் பற்றியதே. எம்பிரான் என்பதற்கு நமக்குப் பிரியமானவன் என்பது பொருள். எனவே நமக்குப் பிரியமானவனே நமக்குத் தலைவனாகவும் இருப்பதுதானே பொருத்தமானது. இதில் தலைவன் இலக்கணம் கூறுவதும் காண்க. வேத சிவாகமங்கள்: "வேதசிவாகமங்கள் இறைவனால் அருளிச்செய்யப்பெற்றவை. உலகியல் பொது தர்மங்களைப் போதிப்பது வேதம். ஆன்மிகச் சிறப்பியல்புகளை உபதேசிப்பது சிவாகமம். இறைவன் நூல், தந்திர கலை,மந்திரகலை, உபதேசகலை என மூன்றாய்த் திகழும். தந்திர கலை: தந்திர கலை என்பது கர்ம காண்டம் எனப்பெறும். நாம்நாள்தோறும் செய்யவேண்டிய நித்திய கர்மாநுட்டானங்களையும், ஏதேனும்பயன்கருதிச் செய்யப்பெறும் சிறப்புக் கர்மாக்களையும் இது தெரிவிப்பது. மந்திர கலை: மந்திர கலை என்பது உபாசனா காண்டம் எனவும் பேசப்பெறும். கர்மகாண்டத்தில் சொல்லப்பெற்ற கர்மாக்களை மேற்கொண்டு செய்யும் செயல்முறைகளை இது கூறுவது.
|