உபதேச கலை: உபதேச கலை என்பது ஞானகாண்டம் எனவும் பேசப்பெறும். தலைவனாகிய இறைவனது இயல்புகளையும், அவனது அடிமைகளாகிய உயிர்களின் இயல்புகளையும் அவனது உடைமைகளாகிய உலகு, உடல், மனம் முதலிய உருவங்களின்(தத்துவங்களின்) இயல்புகளையும் இது தெரித்துணர்த்துவது. தந்திரகலையாகிய கர்மகாண்டத்திலேயே மந்திரகலையாகியஉபாசனா காண்டத்தையும் அடக்கிக் கர்மகாண்டம் எனவும், உபதேசகலையைஞானகாண்டம் எனவும் கூறுவர். மந்திரமும் தந்திரமும் ஆனார்: மேற்கூறிய இருகாண்டத்துள், கர்மகாண்டத்தையே"மந்திரமும் தந்திரமும் ஆனார்போலும்" (தி.6 ப.16 பா.1) எனத் திருஇடைமருதூர்த் திருத்தாண்டகம், "சூலப்படையுடையார்" என்ற பதிக முதல்பாடலில் குறிப்பிட்டாரேனும், உபதேசகலையாகிய ஞானகாண்டத்தையும் இதனுள் அடக்கிக்கூறும் கருத்தினரே அப்பரடிகள். இக்கருத்தைத் தருமை ஆதீனம் பத்தாவது குருமூர்த்திகளாகிய சிவஞான தேசிக சுவாமிகள், தாம் அருளிய தட்சிணாமூர்த்திதிருவருட்பாவில், "தந்திரகலை அறிவனோ, மந்திரகலை அறிவனோ, சாரும்உபதேச கலையில் தந்த கைலாச பாரம்பரியமாக வரு சமப்ரதாயம் அறிவனோ" என்பதனாலும், கர்மகாண்டம், ஞானகாண்டம் என்னும் இரண்டையும் அறிவிப்பதே அப்பர் கருத்து என்பதைத் தெளியலாம். ஐவகையால் நினைவார்: ஐவகையாவன, படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளல் என்னும் ஐந்தொழிலை இயற்றும் ஆற்றலைக் குறிக்கும். இவ்வைவகைஆற்றல் ஒருங்கு நிற்குமிடத்து ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்னும் ஐந்து திருமுகங்களாய் நிற்கும். இவை பிரிந்துநிற்குமிடத்து மனோன்மனி உடனாய சதாசிவமாய், மகேஸ்வரி உடனாகியமகேசுவரராய், உமை உடனாகிய உருத்திரராய், இலக்குமி உடனாகிய திருமாலாய், சரசுவதி உடனாகிய பிரமனாய் நின்றருள்செய்வர். ஈசானம் - மேல்நோக்கியமுகம். தத்புருஷம் - கிழக்கு முகம், அகோரம் - தெற்கு முகம், வாமதேவம் -வடக்குமுகம், சத்தியோசாதம் - மேற்குமுகம். இக்கருத்தையே திருப்பூவணப்பதிகமாகிய "வடியேறு திரிசூலம்" (தி.6 ப.18 பா.1) எனத்தொடங்கும் திருத்தாண்டகப்பதிகம் மூன்றாம் பாடல் மூன்றாம் அடியில், "ஐவகையால்நினைவார்பால் அமர்ந்து தோன்றும்" என்று அருளியுள்ளார். வைகைத் திருக்கோட்டில் நின்ற திறம்: இப்பதிகம், ஒன்பதாம் பாடல், இரண்டாம் மூன்றாம்அடிகளில்
|