| திருவளர் ஆரூர் மூலம், திருவானைக் காவே குய்யம் | | மருவளர் பொழில்சூழ் அண்ணா மலைமணி பூரம், நீவிர் | | இருவரும் கண்ட மன்றம் இதயமாம், திருக்கா ளத்தி, | | பொருவரும் கண்ட மாகும் புருவமத் தியமாம் காசி. |
| பிறைதவழ்கயிலைக் குன்றம் பிரமரந் திரமாம், வேதம் | | அறைதரும்துவாத சாந்தம் மதுரை, ஈது அதிகம், எந்த | | முறையினால்என்னின்? முன்னர்த் தோன்றியமுறையால்என்றுஅக் | | கறையறுதவத்தரோடு கவுரியன் கோயில் புக்கான். | -திருவிளை.புரா.வெள்ளி.ப.6, 7 |
குலம்கொடுத்துக் கோள் நீக்கவல்லான்: "ஆதிக்கண் நான்முகத்தில்" என்று தொடங்கும் திருநள்ளாறு திருத்தாண்டகப் பதிகத்தின் ஆறாம் பாடலில் இறைவன் குலம்கொடுத்துக் கோள்நீக்க வல்லான் என்றும், தயாமூலதர்மமென்னும் தத்துவத்தின் வழிநின்று, தாழ்ந்தோரை உயர்த்துகின்றான் என்றும், இரண்டு தர்மங்களைச் சொல்கிறார். அழுக்கைச் சேர்த்து அழுக்கைப் போக்குவதுபோல், குலத்தைக் கொடுத்துத்தான் குலத்தைக் கெடுக்கிறான் இறைவன். கோள் நீக்கவல்லான்என்றால் குற்றத்தைப் போக்க வல்லான் என்பது பொருளாகிறது. தயையே மூலதர்மம்: தயை என்பது கருணை அல்லது அருள் எனப்பொருள்படும். இறைவனதுஎண்குணங்களில் பேரருளாளன் என்பது ஒன்று. அவன் பெருங்கருணையால்தான் இவ்வுலகத்தைப் படைத்து, காத்து, அழித்து, மறைத்து, அருளி ஐந்தொழில்புரிகின்றான். இவ்வைந்தொழிலால் உயிர்கள் பலவகையிலும் படிப்படியாகவளர்ந்து வருகின்றன. அவன் அருள் இன்றேல் ஐந்தொழில் இல்லை. ஐந்தொழில்இன்றேல் உயிர்களுக்கு ஈடேற்றம் இல்லை. காரிட்ட ஆணவக் கரு அறையில், கண்ணிலாக் குழந்தையைப்போல், கட்டுண்டு செயலற்றுக் கிடக்கும் உயிர்களை, அருட் பார்வையால் பிறவிக்குக் கொணர்ந்து, உடல் முதலிய கருவி கரணங்களைக் கொடுத்து, அறிவுபெருகச் செய்து, நல்லது கெடுதல்களை அறியச்செய்து, காலப்போக்கில் நல்லதை நாடவும், அல்லதை வீடவும் செய்து, உயிர்களை உயர்த்துகிறான். தாழ்ந்த உயிர்களை உயர்த்துதற்கே, பலகோடி பிறவிகளை உயிர்கட்கு அளித்து, படிப்படியாக உயர்த்தித் தன்னிலையை மன் உயிர்கள்
|