புலிமடு: இது சிதம்பரத்திற்குத் தென்பால் ஒன்றரைக் கி.மீ. தூரத்தில் இருக்கிறது. வியாக்கிரபாத தீர்த்தம்: இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு மேற்கே இருக்கும் இளமையாக்கினார் கோயிலுக்கு எதிரில் இருக்கும் குளம் ஆகும். அனந்த தீர்த்தம்: இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு மேற்கே திருவனந்தேச்சுரத்துக்கு முன்பு இருக்கும் திருக்குளமாகும். நாகச்சேரி: இது அனந்தேச்சுரத்துக்கு மேல்பால் இருக்கும் திருக்குளமாகும். பிரமதீர்த்தம்: இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு வட மேற்கே இருக்கும் திருக்களாஞ்சேரியில் உள்ள திருக்குளமாகும். சிவப்பிரியை: இது நடராசப்பெருமான் திருக்கோயிலுக்கு வடக்கேயுள்ள பிரமசாமுண்டி கோயிலுக்கு முன்புள்ள திருக்குளமாகும். திருப்பாற்கடல்: இது சிவப்பிரியைக்குத் தென்கிழக்கில் இருக்கிறது. காணமுத்தி தரும் தலம். அர்த்தயாமத்தில் எல்லாத் தலங்களிலுமுள்ள மூர்த்திகளின் கலைகள் வந்து ஒடுங்கப்பெறுவது. வியாக்கிரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், சூதர் முதலான முனிவர்களும், திருநீலகண்டர், திருநாளைப் போவார், கூற்றுவர், கணம் புல்லர், கோச்செங்கட் சோழர், 
 |