பக்கம் எண் :

19
 

நிரூபியாய் ரூபியுமாய் நின்றான்:

இறைவன் யாதொரு வடிவமும் இல்லாதவன். இது அவனது உண்மைநிலை. ஆனால் உலகத்தை நடத்துவதற்கு மூன்று வடிவம் கொள்கிறான். 1. அருவம்: இது ஆகாயம் போன்றது. இதனைத் தில்லையில் உள்ள "இரகசியம்" நமக்கு நன்கு உணர்த்தும். 2. உருவம்: இது மனித உருவம் போன்றது. தில்லையில் நடராசப்பெருமான் திருவுரு இதனைத் தெளிவிக்கும். 3. அருவுருவம்: அருவமும் இன்றி, உருவமும் இன்றி, தத்துவம் நிறைந்த அடையாளமாய்த் திகழ்வது. தில்லையில் சிவலிங்க வடிவாய் உள்ளது. வானக்கவிவும், மனிதத்தலையும் இத்தத்துவத்தை இனிதே விளக்கும். உருவம் அற்றநிலையே இறைவனுக்கு உண்மைநிலை என்பதை நமது ஆதி குருமூர்த்திகள், தமது ஆசாரியரைச் சிவமாக வைத்து அருளிய சிவபோகசாரப்பாடலால் (பா.2) அறிந்து இன்புறத்தக்கது. அப்பாடல்,

அருவும் உருவும் அருவுருவும் அல்லா
ஒருவன் உயிர்க்குயிராய் ஓங்கித் - திருவார்
கமலைவரு ஞானப்ர காசனென வந்தே
அமலபதந் தந்தெனையாண் டான்.

அப்பர் கூறும் அப்பாடல் பகுதி திருமறைக்காட்டுத் திருத்தாண்டகம் "சிலந்திக்கருள் முன்னம்" (தி.6 ப.23 பா.3) எனத் தொடங்குவது. அதன் மூன்றாம் அடியில் "நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்" என அறிவிக்கிறது. நிரூபி - உருஅற்றவன். ரூபி - அருவம், உருவம், அருவுருவம் கொள்பவன்.

யோகநெறித் தியாகேசன்:

அப்பர் சுவாமிகள் அருளிய திருவாரூர்த் திருத்தாண்டகம் யோகநெறியை உணர்த்தும் சிறப்புடையது. ஆரூர் மூலாதார க்ஷேத்திரம் என்பதும், சுந்தரருக்கு யோகநெறி அருளியது என்பதும் சிந்திக்கத்தக்கது. யோகமார்க்கத்தில் இறைவனை அடைந்துய்ந்தவர் சுந்தரர். இவர் வரலாற்றில் மிகுந்த இயைபுடையது ஆரூர். இது, யோகநெறி காட்டும் தலமாக இலங்குவதில் வியப்பில்லை. அதனால் அப்பர் அடிகள் "உயிராவணம் இருந்து உற்றுநோக்கி" (தி.6 ப.25 பா.1) என்ற இத்தலத் திருத்தாண்டகத்தில் யோகநெறியினை விளக்கி அருளுகிறார். மங்கையோடு இருந்தே யோகு செய்யும் அம்மணாளனை, உயிர் எங்ஙனம் ஒன்றியிருந்து வழிபடவேண்டும் என்று இதில் கூறுகிறார். உயிர்க்காற்றை அடக்கி உற்றுநோக்கி, உள்ளம் எனும்கிழியில் இறைவனின் திருவுருவத்தை எழுதி, அதன் முன்பு உயிரையே ஆவணம் செய்து தந்தால், அஃதாவது மீளா அடிமை உனக்கு என ஓலை எழுதித் தந்தால், தன்னை உணரும்