பக்கம் எண் :

215
 

2. கடம்பவன புராணம்: இது தொண்டைநாட்டிலுள்ள இலம்பூரிலிருந்த வீமநாத பண்டிதரால் இயற்றப்பெற்றது.

3. சுந்தரபாண்டியம்: இது தொண்டைநாட்டிலுள்ள வாயிற் பதியிலிருந்த அனதாரியப்பரால் எழுதப்பெற்றது.

4. திருவிளையாடற் புராணம்: இது திருமறைக்காட்டிலிருந்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பெற்றது. இது சமய வளர்ச்சிக்கும் தமிழ்வளர்ச்சிக்கும் பெரிதும் பயன்படுவது. இது தோன்றிய பின்னர், இத்தலத்திற்குரிய வேறு புராணங்களை மக்கள் விரும்பிப் படிக்காததே இதன் பெருமையை உணர்த்துவதாகும். சங்கநூல் அறிவுசான்ற திரு. ந. மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் இதற்குச் சிறந்த உரையெழுதியுள்ளார்கள்.

5. திருவிளையாடல் போற்றிக்கலி வெண்பா: 6. மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி: இவ்விரு நூல்களும் மேற்குறித்த பரஞ்சோதி முனிவரால் இயற்றப்பெற்றனவாகும்.

7. மதுரைக் கலம்பகம்: 8. மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்: இவ்விரு நூல்களும் குமரகுருபர அடிகளாரால் இயற்றியருளப் பெற்றன. இவைகளன்றி மதுரைக் கோவை, மதுரைச் சொக்கநாதர் உலா, தமிழ்விடுதூது முதலிய பல பிரபந்தங்களும் இறையனார் அருளிய களவியலும் (அகப்பொருள் இலக்கணம்) இத்தலத்தின் சிறப்பிற்கு உரியன.

திருஞானசம்பந்தப் பெருந்தகையார் அம்பிகை சிவஞானம் குழைத்து அருளிய இன்னமுதை உண்டவர். அவர் கடவுளைத் தவிர வேறு யாரையும் பாடாதவர். அவர், இப்பதியில், மங்கையர்க்கரசி யாரை நோக்கி, "உமைக் காண வந்தனம்" என்றதோடு அவரைத் திருப்பதிகத்துள் வைத்துப் பாடியருளியுள்ளார்கள். ஆதலால், மங்கையர்க்கரசியார் பெருஞ்சிறப்பு வாய்ந்தவர் என்பது பெறப்படுகிறது. மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் பதிகத்தில் வைத்துப் பாடும்பொழுது, மங்கையர்க் கரசியாரைக் குறிக்குங்கால் சிவன், உமை இவர்களோடு தொடர்புபடுத்திக் கூறியுள்ளார். குலச்சிறை யாரைக் குறிக்கும்பொழுது சிவபெருமானோடுமாத்திரம் தொடர்பு படுத்திக் கூறியுள்ளார். இவற்றால் மங்கையர்க்கரசியார் தம் கணவரோடு வாழவேண்டுமென்று, ஞானசம்பந்தர்