பக்கம் எண் :

22
 

ஓராதார் உள்ளத்தில் நில்லார்:

நினையாதவர் உள்ளத்தில் மறைந்திருப்பானே தவிர நிறைந்திருக்கமாட்டான் இறைவன். உள்ளுருகி நிற்பார் சிந்தையில் தெளிவாயிருப்பவன். இதனை "ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே, உள்ளூறும் அன்பர் மனத்தார் தாமே" (தி.6 ப.36 பா.8) என்றும் திருப்பழனத் தாண்டகப் பகுதியில் அறிவிக்கிறார். மேலும் "விடையேறி" என்னும் தாண்டகத்தில் சப்தஸ்தானத் தலங்களில் ஐந்து தலங்களைக் குறிப்பிட்டு உள்ளமை அறிந்து மகிழத் தக்கது.

ஏழூர் விழா:

விடைஏறி வேண்டுலகத் திருப்பார் தாமே

விரிகதிரோன் சோற்றுத் துறையார்1 தாமே

புடைசூழத் தேவர் குழாத்தார் தாமே

பூந்துருத்தி2 நெய்த்தானம்3மேயார் தாமே

அடைவே புனல்சூழ் ஐயாற்றார்4தாமே

அரக்கனையும் ஆற்றல் அழித்தார் தாமே

படையாப்பல் பூதம் உடையார் தாமே

பழன நகர்5 எம்பிரானார் தாமே.

-தி.6 ப.36 பா.10

மேலே 1, 2, 3, 4, 5 எனக் குறியிட்டவற்றுடன், திருவேதிகுடி, திருக்கண்டியூர் என்னும் இருதலங்களும் சேர்த்து சப்தஸ்தானத் தலங்கள் எனப் போற்றப்படுகிறது.

திருவையாறு சித்திரைப் பெருவிழாவை அடுத்து நந்திகேஸ்வரர் திருக்கல்யாண ஊர்வலமாக சப்தஸ்தான விழா நடைபெற்று வருகிறது. சித்திரைப் பெருவிழாவிற்கு முன்பே, பங்குனி மாதத்தில் திருநந்திதேவர் திருஅவதாரவிழா ஐயாற்றுக்கு அண்மையில் உள்ள அந்தணர் குறிச்சியிலும், திருமணவிழா திருமழபாடியிலும், திருமண ஊர்வல விழா சப்தஸ்தானங்களிலும், விழாவாகக் கொண்டாடப் படுகிறது. திருவையாறு, திருக்கயிலாயமாகப் போற்றப் பெறுவதால், அதை மையமாக வைத்து, ஆறு ஊர் சுவாமிகளும் திருவையாற்றிற்கு எழுந்தருளி, ஐயாறப்பரும் அறம்வளர்த்த அம்மையும் கண்ணாடிப் பல்லக்கில் எழுந்தருள, ஏழூர் சுவாமிகளும் விசேட பல்லக்கில் உடன்வர, நந்தியெம் பெருமான் விளாமிச்சைவேர்ப் பல்லக்கில் எழுந்தருள, தேவார பாராயணம், பஜனைகோஷ்டிகள் புடைசூழ வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இன்றும் நடைபெறுகிறது.

இன்பம் துன்பம் இல்லான்:

இறைவன் இன்பமே வடிவானவன். துன்பம் என்பது ஒரு சிறிதும்