பக்கம் எண் :

223
 

அறச்சாலைகள்:

இவ்வூரில் விக்கிரமசோழன் காலத்தில் பெருந்திருவாட்டி அறச்சாலை, சங்கரதேவன் அறச்சாலை, முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலை என்னும் அறச்சாலைகள் இருந்தன. இவற்றுள் பெருந்திருவாட்டி என்னும் அறச்சாலை, கங்கைகொண்டசோழபுரத்து கங்கை கொண்ட சோழன் திருக்கொற்றவாசலில் புறவாயில் சேனாபதியாக இருந்த இளங்காரிகுடையான் சங்கரன் அம்பலன்கோயில் கொண்டானான அனந்தபாலன் என்பவனால் நிறுவப்பெற்றதாகும். சங்கர தேவன் அறச்சாலை திருவாவடுதுறை உடையார்கோயில் சிவலோக நாயகன் திருவாசலின் முன்பக்கத்தில் இருந்தது. மேற்குறித்த மடங்களிலும் அறச்சாலைகளிலும் திருவாவடுதுறை உடையார் திருநாளில் அடியார்களுக்கும், பிராமணர்களுக்கும், த்பசிகளுக்கும், அநாதை களுக்கும் அமுது அளிக்கப்பெற்றுவந்தன. முந்நூற்று அறுபத்து நால்வன் அறச்சாலையில் மருத்துவ நூல் படிப்பவர்களுக்கும், இலக்கணம் படிப்பவர்களுக்கும் அமுது அளிக்கப்பெற்றுவந்த செய்தி குறிப்பிடத்தக்கதாகும். இவைகளன்றி முதலாம் இராஜேந்திரசோழன் கல்வெட்டில் சர்வதேவன் திருமடம் என்றும் குறிக்கப்பெற்றுள்ளது.

நடனசாலை:

இத் திருக்கோயிலில் முதற்குலோத்துங்கசோழன் காலத்தில் நானாவித நடனசாலை என்னும் பெயருள்ள நடனசாலை இருந்தது.

அளிக்கப்பெற்ற நில நிவந்தங்களுள் சில:

இக்கோயிலைக் கட்டிய கற்றளிப்பிச்சன் திருப்பதியம் பாடுவார் ஒருவர்க்கும், திருமஞ்சன மட்டுவார்க்கும், உவச்சர்களுக்கும், மடத்துக்கும் சிற்றானைச்சூரில் நிலம் வாங்கி அளித்துள்ளான். கோப்பரகேசரிவர்மர் (முதற் பராந்தக சோழன்) காலத்தில் இந்நிவந்தம் செய்யப்பெற்றதாகும்.

இதை உணர்த்தும் கல்வெட்டுப் பின்வருமாறு:

ஸ்வஸ்திஸ்ரீ கோப்பரகேசரிவன்மற்கியாண்டு 3 (மூன்றா) வது திருவாவடுதுறைக் கற்றளிப்பிச்சநேன். சிற்றானைச்சூரனான்