பக்கம் எண் :

224
 

விலைக்கறக்கொண்டு மேற்புலத்து வடக்கடையத் திருப்பதியம்

பாடுவாரொருவற்கு அறுமாவும். இதன் தெற்கடை காற்செய திருமஞ்சனமட்டுவார்க்குக் காலும் இதன் தெற்கடையத் திரு உவச்சர்களுக்குக் காணி மடத்துக்கு காலுமாக நிவந்தஞ்செய்து குடுத்தேன். கற்றளிப்பிச்சநேந் இது பன்மாஹேஸ்வர ரக்ஷை. இக் கல்வெட்டு அர்த்தமண்டபத்தின் கிழக்குப்புறச் சுவரில் வாசலுக்கும் துவாரபாலகர்க்கும் வடபால் இருக்கின்றது.

திருமூலநாயனாரைப் பற்றிய நாடகம்நடிப்பதற்கும் ஆரியக் கூத்து ஏழு அங்கம்ஆடுவதற்கும் அளிக்கப்பெற்ற நில நிவந்தம்:

திருவாவடுதுறை உடையாரின் திருவிழா முடிவுநாளில் அதாவது புரட்டாசிமாதம் பூரட்டாதி நட்சத்திரத்தன்று திருமூல நாயனாரது நாடகம் நடித்தல்; ஆரியக் கூத்து ஏழு அங்கம் ஆடுதல் இவைகளைப்பற்றி முன்னர்க் கூறப்பெற்றுள்ளது. அவைகளை அக்காலத்தே நடித்தவர் வடுகமாங்குடி பாண்டிகுலாசனி ஆவர். அவர்க்குப்பின் அவைகளை நடித்தவர் சாக்கையர் குமரன் சீகண்டவன் ஆவர். அவைகளின்பொருட்டு சீகண்டனுக்கு சாத்தனூர் சபையார் தங்கள் ஊரில் இருந்த அறச்சாலை அம்பலத்தில் கூட்டம் குறைவறக் கூடியிருந்து தென்கரை சாக்கைவேலி ஆன நில அளவுப்படி அரையே இரண்டுமாவும், திரு ஆவடுதுறை ஆழ்வார் தேவதானம் நெற்குப்பை பதிற்றுவேலியினும் கிழக்கடைய மாம் பள்ளி வாய்க்காலுக்கு வடக்கு நிலம் முக்காலும் ஆக நிலம் ஒன்றே எழுமாவை நிர்த்தபோகமாக அளித்திருந்தனர். இச்செய்தி முதலாம் இராஜராஜசோழரின் ஒன்பதாமாண்டுக் கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது.

விக்கிரமபாண்டியன் சந்தி:

விக்கிரமபாண்டியன் தான் பிறந்த அஸ்தநட்சத்திரத்தில் தன்பேரால் கட்டின விக்கிரமபாண்டியன் சந்திக்கு அமுதுபடி, சாத்துபடி உள்ளிட்ட நிவந்தங்களுக்கு உடலாக விருதராச பயங்கர வளநாட்டுக் கஞ்சனூர்ப்பற்றுத் தென்கால் திரைலோக்கியான விருதராசபயங்கரச் சதுர்வேதிமங்கலத்துக் குலோத்துங்கசோழன் பெருவழிக்கு உட்பட்ட திறப்பில் இருபதுவேலியும், துறைசையார் அகரமான இராஜேந்திரசோழச் சதுர்ப்பேதிமங்கலத்துப் பிடாகை கூத்தனூர் கொடியாலத்து விட்ட நிலம் பதிற்றுவேலியும், வேணவரை நல்லூரில் நான்கு வேலியும், ராட்சதச்சதுப்பேதிமங்கலத்துப் பிடாகை யூரிலும்